ரியோ ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார் இந்திய குத்துச் சண்டை வீரர் நீரஜ் கோயத்

201607092150199591_Neeraj-Goyat-Fails-to-Secure-Rio-Berth-Settles-for-Bronze_SECVPF

ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்கான ஒவ்வொரு போட்டிக்குமான தகுதிச் சுற்று பல்வேறு நாடுகளில் நடைபெற்றது. சில போட்டிகளுக்கு தற்போதும் தகுச்சுற்று நடைபெற்று வருகிறது.

சர்வதேச குத்துச்சண்டை சங்கம் சார்பில் ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கான தொடர் வெனிசுலாவில் உள்ள வர்காஸ் நகரில் நடைபெற்றது. இந்த தொடரில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீரர்கள் ரியோவிற்கு தகுதி பெறுவார்கள்.

அதாவது, முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்று விடுவார்கள். அதன்பின்னர் அரையிறுதில் தோற்கும் வீரர்களுக்கு இடையில் போட்டி நடத்தப்படும். இதில் வெற்றிபெறும் வீரர் தகுதி பெறுவார்.

இந்த போட்டியில், இந்திய வீரர் நீரஜ் கோயத் 69 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டார். இவர் அரையிறுதிக்கு முன்னேறினார். இதனால் இரண்டு வாய்ப்புகள் இருப்பதால் ரியோவிற்கு தகுதி பெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 2-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அராஜிக் மருட்ஜானை அரையிறுதியில் மோதினார். இதில் நீரஜ் 0-3 என தோல்வியடைந்தார். இதனால் அவருக்கு மேலும் ஒருவாய்ப்பு இருந்தது. அதில் ஸ்பெயின் நாட்டின் சிஸ்ஸோகோவை எதிர்கொண்டார். இதிலும் நீரஜ் தோல்வி அடைந்தார். இதனால் ரியோ ஒலிம்பிக் வாய்ப்பு பறிபோனது. அரையிறுதிக்கு தகுதி பெறும் வீரர்களுக்கு வெண்கலப் பதக்கம் கிடைக்கும் என்ற விதி உள்ளதால் நீரஜ் வெண்கல பதக்கத்துடன் ஆறுதல் பெற்றார்.

இந்த தொடரில் கலந்து கொண்ட கௌரவ் பிதூரி (52 கிலோ), தில்பாக் சிங் (81 கிலோ), முதல் சுற்றிலேயே வெளியேறினார்கள்.

குத்துச் சண்டை பிரிவில் ஷிவ தாபா (56 கிலோ), மனோஜ் குமார் (64 கிலோ) மற்றும் விகாஸ் கிருஷன் (75 கிலோ) ஆகியோர் மட்டுமே ரியோவில் கலந்து கொள்ள தகுதிப்பெற்றுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top