இயக்குனராக மாறிய ஜி.வி.பிரகாஷ்

201607091851240991_GV-Prakash-turned-director_SECVPF

முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் ‘டார்லிங்’ படம் மூலம் நடிகரானார். அந்த படத்தின் வெற்றியால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன. இவர் நடிப்பில் வெளியான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘பென்சில்’ படமும் வெற்றி பெற்றதால் கோலிவுட்டில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பெற்றார்.

தற்போது அவர் ‘புரூஸ் லீ’, ‘கடவுள் இருக்கான் குமாரு’, ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஒரு படம் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கடவுள் இருக்குறான் குமாரு’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் இயக்குனர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். மேலும் படத்திற்குள் படம் எடுப்பது போலவும், அவருக்கு ஜோடியாக ஆனந்தி நடிகை கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் இந்த படத்தில் நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ், ஆர்ஜே பாலாஜி, தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, சிங்கம்புலி, ரோபோ சங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top