ஜிகா வைரஸ் அச்சத்தால் 2-ம்நிலை கோல்ப் வீரர் ரியோவில் இருந்து விலகல்

201607092111568240_Golf-world-No-2-Johnson-skips-Rio-with-Zika-concerns_SECVPF

கடந்த சில மாதங்களுக்கு முன் தென் அமெரிக்க நாடுகளில் ஜிகா என்ற கொடூர வைரஸ் நோய் பரவியது. இந்த நோய் குறிப்பாக கர்ப்பிணி பெண்ணை மட்டும் தாக்கும். கர்ப்பிணி பெண்ணை இந்த வைரஸ் தாக்கிவிட்டால், அது வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையை பாதிக்கும். இதனால் பிரேசில் நாட்டில் நடக்கும் ஒலிம்பிக் தொடரை சில வீரர்கள் புறக்கணித்தனர்.

இந்த வகையில் தற்போது கோல்ஃப் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் டஸ்டின் ஜான்சன் ரியோவில் இருந்து விலகியுள்ளார்.

இதற்கு முன் முதல் நிலை வீரரான ஜேசன் டே, நான்காம் நிலை வீரரான ரோரி மெக்இல்ராய், 8-ம் நிலை வீரரான ஆடம் ஸ்காட் ரியோவில் இருந்து விலகினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஜான்சன் கூறுகையில் ‘‘இது எனக்காக எளிதில் எடுக்கப்பட்ட முடிவல்ல. ஆனால், ஜிகா வைரஸ் குறித்த எனது கவலைகளையும் புறந்தள்ளிவிட முடியாது’’ என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top