மூன்று கெட்டப்புகளில் சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

‘இது நம்ம ஆளு’ படத்திற்கு பிறகு சிம்பு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. சிம்பு இப்படத்தில் மூன்று கெட்டப்புகளில் நடிப்பதாக கூறப்பட்டது. இதனால் ஹாலிவுட் மேக்கப் கலைஞர் சீன் பூட், சிம்புவின் மேக்கப்பிற்காக இப்படத்தில் சேர்க்கப்பட்டார்.

சமீபத்தில்கூட இந்த படத்திற்காக சிம்பு வித்தியாசமான தோற்றத்தில் இருந்த ஒரு புகைப்படம் வெளியானது. சிம்பு மூன்று கெட்டப்புகளில் நடிப்பதால் மூன்று கதாநாயகிகள் நடிப்பார்கள் என்று கூறப்பட்டது. அதன்படி, கதாநாயகி தேடுதல் படலமும் நடந்து வந்தது. கடந்த வாரத்தில் ஒரு சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்க ஒப்பந்தமானார். மஹத்தும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும், இப்படத்தின் மூலம் சிம்புவுடன் மீண்டும் இணைந்த யுவன் பாடல்களை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இருந்தார். மூன்று பாடல்கள் முடிவடைந்துள்ள நிலையில், மொத்தம் 9 பாடல்கள் இந்த படத்தில் இடம்பெறப் போவதாக அறிவித்துள்ளனர்.

இவ்வளவு வேலைகள் நடந்தும் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமலேயே இருந்தது வந்தது. இந்நிலையில், இன்று இப்படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கியுள்ளனர். முதல்கட்ட படப்பிடிப்பில் சிம்பு, 80-களில் உள்ள கெட்டப்பில் நடிக்கிறார். இதில் மஹத்தும் இணைந்து நடிக்கிறார். இந்த கெட்டப்புடன் சிம்பு படப்பிடிப்பில் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இப்படத்தை மைக்கேல் ராயப்பன் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top