ஸ்பானிய மாடு பிடி விளையாட்டில் இந்த நூற்றாண்டின் முதல் பலி

160710000918_spain_bull_fight_640x360_reuters_nocredit

ஸ்பெயின் பிரசித்தி பெற்ற மாடு பிடி நிகழ்வில் , மாடு பிடி வீரர் ஒருவர் மாடால் முட்டிக்கொல்லப்பட்டார். இந்த நூற்றாண்டில் ஒரு மாடுபிடி விளையாட்டு வீரர் மாடால் முட்டிக்கொல்லப்படும் முதல் சம்பவம் இதுவாகும்.

கொல்லப்பட்டவர் 29 வயதான விக்டர் பேரியோ என்ற ஒரு தொழில்முறை மாடுபிடி விளையாட்டு வீரர்.

ஸ்பெயினின் கிழக்குப் பகுதி நகரான டெருவெல் என்ற இடத்தில் நடந்த இந்த நிகழ்வு நேரடியாக தொலைக்காட்சிகளால் ஒளிபரப்பப்பட்டுக்கொண்டிருந்தது.

மாடு பேரியோவை குத்தித் தூக்கி வீசி,பின்னர் அவரது வலப்புற நெஞ்சில் மூர்க்கமாகக் குத்தித் தூக்கி எறிந்ததை தொலைக்காட்சிக் காட்சிகள் காட்டின.

சனிக்கிழமை இந்த சம்பவம் இதே நேரத்தில் வேலென்சியாவுக்கு அருகே, மற்றொரு கிராமமான, பெட்ரெகுவெர் என்ற இடத்தில் மாடு, கிராமத்தில் புகுந்து தாறுமாறாக ஓடி ஒரு 28 வயது நபரை முட்டிக்கொன்றது.

இது போல மாடுபிடி வீரர் ஒருவர் கடைசியாக 1985ம் ஆண்டில்தான் கொல்லப்பட்டார். அவர் பெயர் ஜோஸ் க்யூபெரோ.ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் பேரியோவின் மரணம் குறித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

கடந்த நூற்றாண்டில் 33 மாடுபிடி வீரர்கள் உட்பட 134 பேர் ஸ்பெயினில் மாடுகளால் கொல்லப்பட்டதாக ஸ்பெயினின் ‘எல் பேய்ஸ்’ பத்திரிகை கூறியது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top