கண்டம் தாண்டும் ஏவுகணை: வடகொரியா மீது தென்கொரியா புகார்

160709061535_submarine_ballistic_missile_n-korea_640x360_epa_nocredit

சர்வதேச தடையை மீறி, நீர்முழ்கிக் கப்பலில் இருந்து ஏவக்கூடிய கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்துப் பார்க்க வடகொரியா முயற்சித்திருப்பதாக தென்கொரிய ராணுவ அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இந்த ஏவுகணை ஏவிய துவக்க நிலையிலேயே செயலிழந்திருக்கலாம் என அவர்கள் கூறியுள்ளனர்.

வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்ள, அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து, தென் கொரியாவில் ஏவுகணை தடுப்பு கேடய அமைப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தை செய்துகொண்ட அடுத்த நாள் இந்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் வட கொரியாவின் சட்டத்திற்கு புறம்பான சோதனைகளை தொடர்ந்து இரு நாடுகளும் இந்த தற்காப்பு அமைப்பை உருவாக்கின.

அமெரிக்க அரசும் ஜப்பானும் வட கொரியாவின் ஏவுகணை முயற்சி, ஐ.நாவின் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு எதிரானது என்று கண்டனம் தெரிவித்துள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top