16மெகா பிக்சலுடன் கூடிய Vivo x,x7 plus ஸ்மார்ட் போன் வெளியீடு:

Vivo-Xplay-5-2.jpg.pagespeed.ce.2H-4cI3ix0

ஸ்மார்ட்   போன்களை தயாரித்து வழங்கும்  வைவோ நிறுவனம்  இறுதியாக  வைவோ  மேக்ஸ் 3 ஸ்மார்ட் போனினை தயாரித்து வெளியிட்டதை அடுத்து அதன் அடுத்த  படைப்பான   X7 மற்றும்  X7 பிளஸினை   அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்  அறிமுக விலை  $375  என நிர்ணயித்துள்ளது.   இவையிரண்டும் கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு ஆகிய நிறங்களில் வருகின்றன. மேலும்   எந்தெந்த பகுதிகளில்  கிடைக்கும் என்பது  பற்றிய தகவல்கள் வைவோ தயாரிப்பாளர்களால்  இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதுவரை  கிடைத்த தகவலின்படி கீழ்கண்ட அம்சங்கள் X7 மற்றும்  X7 Plus  இல் நிறைந்திருக்கின்றன.   இம்மாதம் 7 ஆம்  தேதி சீனாவில் இந்த ஸ்மார்ட் போன்கள் வெளியிடப்படும் .

இரண்டுமே    திரையின் அளவு மற்றும் பேட்டரி திறனில் மட்டுமே வேறுபட்டுள்ளன அதைத்தவிர ஏறக்குறைய ஒரே மாதிரியான  அளவுருக்களையே கொண்டுள்ளன.

வைவோ எக்ஸ் 7 இல்    5.2  இன்ச் திரையும் 1080×1920  பிக்சல்   தீர்மானமும்  3000Mah பேட்டரி சக்தியும்    வைவோ எக்ஸ் 7 பிளஸ்  5.7- இன்ச் திரையும் மற்றும்  4,000 mAh பேட்டரி சக்தியும் கொண்டது.

  •  டூயல் சிம் ஆதரவு கொண்ட  இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களும் போன்களும்     ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் மூலம் இயங்குகிறது.    4GB  ரேம் உடன் இணைந்து 1.8GHz     ஆக்ட்டா கோர்   ஸ்னாப்டிராகன்  ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.
  •  எல்இடி ஃபிளாஷ் கொண்ட 13MP மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும்  16MP    மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.
  •  ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi G, LTE, 3G, Wi-Fi, ப்ளூடூத்  ஆகியவை வழங்குகிறது.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top