பாலிவுட்டுக்கு செல்லும் சந்தானம் படம்

201607091443237427_Santhanam-film-goes-to-Bollywood_SECVPF

கோலிவுட்டில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெறவே ‘இனிமே இப்படித்தான்’ படத்தில் நடித்தார். இப்படமும் வெற்றி படமாக அமைந்தது. இந்த இரண்டு படங்கள் தந்த வெற்றியால் இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிக்க சந்தானம் முடிவு செய்தார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த ‘தில்லுக்கு துட்டு’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பெரிய நடிகர்களின் படங்களுக்கு இணையான ஓப்பனிங் வசூலையும் கொடுத்துள்ளதால், சந்தானத்தை ஹீரோவாக மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் ‘தில்லுக்கு துட்டு’ படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்ய ஒரு சில பாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துடன் பேசி வருவதாகவும் மிக விரைவில் இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top