பயிற்சிப் போட்டி:இந்தியா-மே.இ. தீவுகள் வாரியத் தலைவர் அணி மோதல்

CRICKET-WT20-2016-IND-WIS

இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத் தலைவர் லெவன் அணிகள் இடையிலான 2 நாள் பயிற்சிப் போட்டி மேற்கிந்தியத் தீவுகளின் செயின்ட் கிட்ஸில் சனிக்கிழமை தொடங்குகிறது.

புதிய பயிற்சியாளரான அனில் கும்ப்ளேவின் மேற்பார்வையில் களமிறங்குகிறது இந்திய அணி. காயத்திலிருந்து மீண்டுள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது சமியின் உடற்தகுதியை இந்தப் போட்டியின் மூலம் சோதிக்க கும்ப்ளே முடிவு செய்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள 6 பேர் வாரியத் தலைவர் அணியிலும் இடம்பிடித்துள்ளனர். இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகிறது. அதை முன்னிட்டு பயிற்சிப் போட்டியில் விளையாடுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top