மீண்டும் விம்பிள்டனில் விளையாடுவேன்: ஃபெடரர் நம்பிக்கை

hi-res-5b81642286d5195c74eb6ed78214bb26_crop_exact

ஆண்டின் 3-வது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் மிலோஸ் ரயோனிச் 6-3, 6-7 (3), 4-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருந்த ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரருக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கனடாவின் மிலோஸ் ரயோனிச் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் கனடா வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இந்தத் தோல்வி குறித்து ஃபெடரர் கூறும்போது:

4-வது செட்டில் இரண்டுமுறை டஃபுள் ஃபால்ட் செய்ததை என்னால் நம்பமுடியவில்லை. எனக்கு அதில் வருத்தம். ரயோனிச் அந்த செட்டை வெல்ல நான் வாய்ப்பு தந்திருக்கக்கூடாது. அவர் இந்த வெற்றிக்கு உகந்தவர் என்றாலும் நான் அவர் வெல்ல வாய்ப்புகளை உருவாக்கித் தந்துவிட்டேன். இந்தத் தோல்வி என்னை மிகவும் காயப்படுத்துகிறது. நான் வெற்றிக்கு மிக அருகில் இருந்தேன்.

மீண்டும் விம்பிள்டன் செண்டர் கோர்ட்டில் விளையாடுவேன் என நம்புகிறேன். போட்டி முடிந்து வெளியேறும்போது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தேன். இதுதான் என் கடைசி விம்பிள்டன் என அப்போது எண்ணவில்லை.

விம்பிள்டன் முக்கியம்தான். ஆனால் அது மட்டும் முக்கியமல்ல. அதற்காக மட்டும் நான் டென்னிஸ் விளையாடவில்லை என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top