கர்நாடகவில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்துக்கு மாநில பாஜக எதிர்ப்பு

கர்நாடக மாநிலத்தில் மூடம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும் முதல்வர் சித்தராமையாவுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

“காலங்காலமாக சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கையால் மக்கள் பெரிதும் பாதிப் படைகின்றனர். சாதி ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் ஒடுக்கப் படுகின்றனர். ஜோதிடம், மாந்திரீக செயல்பாடுகளால் அப்பாவி குழந்தைகள் நரபலி கொடுக்கப்படுகின்றனர். ஏழைகளுக்கும், பாம‌ர‌ மக்களுக்கும் ஏராளமான பொருள் இழப்பு ஏற்படுகிறது. இத்தகைய மூடநம்பிக்கையை ஒழிக்க அறிவுஜீவிகள் ஒன்றி ணைந்து போராட வேண்டும்.

இத்தகைய மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் போராட்டத்தில் அறிவுஜீவிகளும், சமூக செயற் பாட்டாளர்களும் தாக்கப்படுகிறார்கள். இதைக் கண்டிக்க வேண்டிய ஊடகங்கள் மூடநம்பிக்கையை வளர்க்கும் ராசி பலனுக்கும், சனிப் பெயர்ச்சிக்கும், ஜோதிடத்துக்கும் அதிகஅளவில் முக்கியத்துவம் அளிக்கின்றன. எனவே மூடநம்பிக் கையை ஒழிக்கும் வகையில் கர்நாடகாவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும். கடந்த முறை நிறுத்திவைக்கப்பட்ட அந்த சட்டத்தை தற்போதைய சட்டப்பேரவை கூட்டத் தொடரிலே நிறைவேற்றப்படும்” என கர்நாடக முதல்வர் சித்த ராமையா அறிவித்திருந்தார்.

இதற்கு சமூக ஆர்வலர்களும், முற்போக்கு மடாதிபதிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள பாஜக சட்டமேலவை த‌லைவர் ஈஸ்வரப்பா, “சித்த ராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மத நம்பிக்கையில் தலையிட முயற்சி செய்கிறது. மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் என்பது பொது மக்களின் நம்பிக்கைக்கு எதிரானது. பொதுமக்களின் நம்பிக்கையில் தலையிட சித்தராமையாவுக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே இந்த சட்டத்தை பாஜக எதிர்க்கும். சட்டமேலவையில் அந்த மசோதாவை தோற்கடிப்போம்” என தெரிவித்துள்ளார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top