சுவாதி கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்: தொல். திருமாவளவன் பேட்டி

சுதந்திர போராட்ட வீரர் இரட்டைமலை சீனிவாசனின் பிறந்த நாள்விழா இன்று கொண்டாடப்பட்டது.
Thol-Thirumavalavan-says-CBI-should-investigate-Swathi_SECVPF
இதையொட்டி சென்னை ஓட்டேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அப்போது திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கஞ்சா சாக்லெட் நடமாட்டம் அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு சிறுவன் கஞ்சா சாக்லெட் சாப்பிட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான். கஞ்சா சாக்லெட் விற்பனையை போலீசார் தீவிரமாக கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண் என்ஜினீயர் சுவாதி கொலை வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. எனவே இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும். தமிழக போலீசார் விசாரிக்க கூடாது. பாதிக்கப்பட்ட சுவாதியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். சுவாதியின் சகோதரிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

இரட்டை மலை சீனிவாசன் பிறந்தநாளில் அரசு விருதுகள் வழங்கி கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் ஏ.சி பாவரசு, எஸ்.எஸ். பாலாஜி மாவட்ட செயலாளர்கள் இரா.செல்வம், நா. செல்லத்துரை, வி.கோ.ஆதவன், மற்றும் இளங்கோ வீர ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top