யூரோ கோப்பை:இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது யார்?பிரான்ஸ்-ஜெர்மனி இன்று மோதல்

1089371_imgw968

யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதியில் பிரான்ஸ்-ஜெர்மனி அணிகள் மோதுகின்றன.

பிரான்ஸின் மார்சீலி நகரில் வியாழக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டத்தில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவதில் இரு அணிகளும் தீவிரமாக உள்ளன. அரையிறுதியில் 5-2 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வீழ்த்திய உற்சாகத்தில் பிரான்ஸ் அணி களமிறங்குகிறது. இதுதவிர அந்த அணி முழு பலத்துடன் உள்ளது. அந்த அணி ஜிரூவ்டு, பேயட், கிரிஸ்மான் என பலம் வாய்ந்த வீரர்களைக் கொண்டுள்ளது.

காலிறுதியில் பெனால்டி ஷூட் அவுட் மூலம் இத்தாலியை வீழ்த்திய நடப்பு உலக சாம்பியனான ஜெர்மனி அணி, முன்னணி வீரர்கள் இன்றி களமிறங்குகிறது. அந்த அணியின் கேப்டன் ஸ்வெய்ன்ஸ்டீகர் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர் இந்த ஆட்டத்தில் விளையாடுவாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இதுதவிர மரியோ கோமேஸ், சமி கேதிரா ஆகியோர் காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் விளையாடமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மட் ஹம்மல்ஸ் ரெட் கார்டு காரணமாக இந்த ஆட்டத்தில் களமிறங்க முடியாது. மரியோ கோமேஸுக்குப் பதிலாக மரியோ கோட்úஸ இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கோட்úஸ, உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் கோலடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஹம்மல்ஸுக்குப் பதிலாக ஸ்கோட்ரான் முஷ்டாபி அல்லது பெனிடிக்ட் இடம்பெற வாய்ப்புள்ளது.

இதுவரை… : இவ்விரு அணிகளும் இதுவரை 27 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ஜெர்மனி 9 ஆட்டங்களிலும், பிரான்ஸ் 12 ஆட்டங்களிலும் வாகை சூடியுள்ளன. 6 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன. பெரிய அளவிலான போட்டிகளில் இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் பிரான்ஸ் அணி ஒன்றில்கூட வென்றதில்லை.

சர்வதேசப் போட்டிகளில் பிரான்ஸ் அணி கடைசியாக விளையாடிய 9 ஆட்டங்களில் ஒன்றில்கூட தோற்கவில்லை. ஜெர்மனி அணி கடைசியாக விளையாடிய 6 ஆட்டங்களில் தோற்கவில்லை. யூரோ கோப்பை போட்டியில் இதுவரை 7 முறை அரையிறுதியில் விளையாடியுள்ள ஜெர்மனி, அதில் 5 முறை வாகை சூடியுள்ளது. அதேநேரத்தில் பிரான்ஸ் அணி இதற்கு முன்னர் சொந்த மண்ணில் நடந்த இரு யூரோ கோப்பை போட்டிகளிலும் (1984, 1998) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதனால் இந்தப் போட்டியில் அந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் அந்நாட்டு ரசிகர்கள் உள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top