என்னைக் கொன்றுவிடுவார்களா? கவலையோடு கேள்வி கேட்ட ராம்குமார்

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், ராயப்பேட்டை மருத்துவமனையில் இருந்து நேற்று மாலை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

killer-ramkumar

முன்னதாக, அவர் தன்னுடன் இருந்த மருத்துவர்கள் மற்றும் காவலர்களிடம், அவ்வப்போது, தன்னை கொன்றுவிடுவார்களா என்று கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

நெல்லையில் ராம்குமார் கைது செய்யப்பட்ட பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் இருந்து ஜூலை 3-ஆம் தேதி மாலை ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டார்.

வரும் வழியில் ஆம்புலன்ஸில் அவர் உறங்காமலே இருந்துள்ளார். மேலும், உடன் பயணித்த போலீஸாரிடமும், மருத்துவர்களிடமும் ‘தன்னைக் கொன்றுவிடுவார்களா?’ என்று கேட்டுகொண்டே வந்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.

மேலும், ராயப்பேட்டை மருத்துவமனையில் அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்துள்ளார். பிற நேரங்களில் வெறித்துப் பார்த்தபடியே படுத்திருந்தாககவும் கூறப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top