உலகின் விலை குறைந்த ஸ்மார்ட்போனின் First Look Video வெளியிடப்பட்டுள்ளது.

ரிங்கிங் பெல்ஸ்  உலகிலேயே விலை குறைந்த ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. qHD 4-inch display, 1GB RAM+8GB storage, 3.2 mp rear camera, 1450 mAh battery உடைய புதிய ஸ்மார்ட் போன் Android KitKat இயங்குதளம் கொண்டது.

முழுவதும் கருப்பு வண்ணம் மற்றும் கருப்பு-வெள்ளை ஆகிய இரு வண்ணங்களில் Freedom 251 ஸ்மார்ட் போன்கள் விற்பனைக்கு வரவுள்ளது. இதற்கான First Look Video-வை  Ringing Bells நிறுவனம் வெளியிட்டுள்ளது. 1 நிமிடம் 16 வினாடிகள் ஓடக்கூடியதாக அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

இரு ஆண்டுகளுக்கு முன்பு இதே சிறப்புகளை கொண்ட ஸ்மார்ட் போன் ரூ.7,000-க்கு விற்கப்பட்ட நிலையில்

தற்போது ரூ.251-க்கு  Freedom 251 வழங்கி அசத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற முன்பதிவில் 7.5 கோடி பேர் புதிய செல்போன்கள் கோரி முன்பதிவு செய்துள்ளதாக Ringing Bells நிறுவனம் தெரிவித்துள்ளது. 2.8 கோடி பேர் உத்தரபிரதேசத்திலும், 2 கோடி பேர் பீகாரிலும்  Freedom 251 ஸ்மார்ட் போன்களுக்காக முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவின் அடிப்படையில் நாளை முதல் ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படவுள்ளதாகவும் Ringing Bells நிறுவனம் கூறியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top