வாட்ஸ் அப் ஈமோஜி ஐகானில் ரஜினிகாந்தின் காபாலி ஐகானும் மிடம் பெற்றது

ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படம் சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது. இதுவரை தமிழ்ப் படங்கள் பற்றிக் கேள்விப்படாத நாடுகள் கூட கபாலியை வெளியிடுவதில் ஆர்வம் காட்டுகின்றன.

Rajinikanth-gets-honoured-with-WhatsApp-emoji_SECVPFஹாலிவுட் திரை வல்லுநர்கள் பலரும் கபாலி குறித்துப் பேசுவதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. இப்போது அமெரிக்காவில் இருக்கும் ரஜினியைச் சந்திக்க முன்னணி திரைப்பட நிறுவனங்கள் இரண்டு முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் ஜாக்கி சானுடன் அவரை இணைத்து ஒரு படம் உருவாக்கும் முயற்சியும் நடக்கிறது. இந்த நிலையில் பிரபல சர்வதேச விமான நிறுவனம் கபாலி படத்தின் புரமோஷனில் இதுவரை இல்லாத பிரமாண்டம் காட்ட ஆரம்பித்துள்ளது.

கபாலி படத்துக்காக ஏராளமான விமானப் பயணத் திட்டங்கள், பேக்கேஜ்களை அறிவித்துள்ள அந்த நிறுவனம், இப்போது கபாலி விமானங்களை இயக்கி வருகிறது. விமானத்தின் வெளிப்பாகம் முழுக்க ரஜினியின் உருவத்தை பிரமாண்டமாக வரைந்து, ‘சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கபாலி’ என்ற விளம்பரத்துடன் சர்வதேச அளவில் விமானங்களை இயக்குகிறது. முகப்புப் பகுதியில் ரஜினி உச்சரிக்கும் ‘மகிழ்ச்சி’ என்ற வார்த்தை ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

இதுவரை உலகில் எந்த ஒரு நடிகர் அல்லது படத்துக்காகவும் இப்படி விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்டதில்லை. அந்தப் பெருமை முதல் முறையாக ஒரு தமிழ் நடிகருக்கும் தமிழ்ப் படத்துக்கும் கிடைத்திருக்கிறது.

தற்போது இதையும் தாண்டும் வாட்சப்பில் வெளியிடபட்டு உள்ள சில ஈமோஜிகளில் ரஜினிகாந்தின்  கபாலி படத்தின் பாத்திரத்தின் ரஜினியின் கபாலி ஐகானும் இடம்பெற்று  உள்ளது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top