சட்டத்திருத்தத்துக்கு எதிராக ஐகோர்ட்டில் வக்கீல்கள் மனித சங்கிலி போராட்டம்

வக்கீல்கள் சட்டத்தில் ஐகோர்ட்டு அண்மையில் திருத்தம் கொண்டுவந்தது. இதற்கு தமிழகம் முழுவதும் வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாதமாக கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Against-AmendmentHigh-CourtHuman-chain-protest_SECVPF

ஐகோர்ட்டு வக்கீல்கள் கடந்தவாரம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போராட்டத்தில், சட்டத்திருத்த நகலை தீயிட்டு எரித்து போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், ஐகோர்ட்டு வக்கீல் சங்கத்தின் செயலாளர் அறிவழகன், பெண் வக்கீல் சங்கத்தலைவர் நளினி ஆகியோர் தலைமையில் ஏராளமான வக்கீல்கள் ஐகோர்ட்டு நுழைவு வாயில் முன்பு நேற்று காலையில் ஒன்று கூடினர்.

அங்கிருந்து செசன்சு கோர்ட்டு வளாகம் முழுவதும் ஊர்வலமாக வந்தனர். பின்னர், என்.எஸ்.சி. போஸ் சாலையில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ‘வக்கீல்கள் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தத்தை ஐகோர்ட்டு உடனே வாபஸ் பெறவேண்டும்’ என்று கோஷம் போட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top