நடப்பு ஆண்டில் 4,300 மெகாவாட் மின்சாரத்தை காற்றாலைகள் வாயிலாக உற்பத்தி செய்கிறது இந்தியா

காற்றாலைகளை தயாரித்து உலகளவில் விற்பனை செய்யும் பிரபல இந்திய நிறுவனம் ’சுஸ்லான்’. இந்த நிறுவன குழுமத் தலைவர் துல்சி தாந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:-

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் காற்றாலை மின் உற்பத்தி 30 சதவீதம் அதிகரிக்கும். ஆந்திர பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளில் புதிய காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளதால் கூடுதலாக  மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலும். தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தியின் அளவு 27 ஜிகாவாட் ஆகும். இது நாட்டின் மொத்த உற்பத்தி திறனில் 9 சதவீதமாகும். இந்திய மரபுசாரா எரிசக்தி துறைக்கு 2015-16 நிதியாண்டு ஒரு சாதனை ஆண்டாகவே இருந்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் 43 சதவீதம் மின் உற்பத்தி திறனை அதிகரித்துள்ளது இந்தியா.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உலக அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் சீனா, அமெரிக்கா, ஜெர்மனிக்கு அடுத்தபடியாக 4-வது இடத்தில் இந்தியா உள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top