மத்திய மந்திரிசபையில் இருந்து 5 மந்திரிகள் நீக்கம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றது. அவரது தலைமையிலான அமைச்சரவையில் 64 பேர் மந்திரிகளாக இருந்தனர்.

Narikkuravarkal-in-ST-Section-Modi-led-cabinet-decideds_SECVPFபதவி ஏற்ற அதேஆண்டு இறுதியில் மத்திய மந்திரி சபையில் பிரதமர் மோடி சிறுமாற்றம் செய்தார். அதன்பிறகு மத்திய மந்திரி சபையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் மத்திய மந்திரிகளில் சிலரது செயல்பாடு பிரதமர் மோடிக்கும், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனவே அவர்கள் மத்திய மந்திரிசபையை மாற்றி அமைக்க முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் இருவரும் கடந்த வாரம் இருமுறை கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

தீவிர ஆலோசனைக்கு பிறகு புதிய மத்திய மந்திரிசபை பட்டியலை பிரதமர் மோடி தயாரித்தார். இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த 19 பேரும் இன்று மந்திரிசபையில் இணைக்கப்பட்டனர். ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் புதிய மந்திரிகளாக 19 பேருக்கும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணமும், ரகசிய காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.

உத்தரபிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மேற்கு வங்கம், மராட்டியம், மத்திய பிரதேசம், டெல்லி, உத்தர காண்ட், கர்நாடகா, அசாம் ஆகிய 10 மாநிலங்களில் இருந்து புதிய மந்திரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்துக்கு அதிகபட்சமாக 4 பேர் புதிய மந்திரிகளாக கிடைத்துள்ளனர். உத்தரபிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலா 3 பேர் மந்திரி சபையில் இடம் பிடித்துள்ளனர்.

மத்திய மந்திரிசபையில் இருந்து 8 முதல் 10 பேர் வரை நீக்கப்படுவார்கள் என்று கடந்த 2 தினங்களாக கூறப்பட்டது. ஆனால், 5 பேரை மட்டும் மத்திய மந்திரி சபையில் இருந்து பிரதமர் மோடி நீக்கியுள்ளார்.

நிகல்சந்த், ராம்சங்கர் கதரியா, சன்வர்லால் ஜாட், மன்சுக்பாய் டி வஸ்வா, எம்.கே. குண்டரியா ஆகிய ஐந்து பேரின் மந்திரி பதவி பறிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top