புற்று நோயால் பாதிக்கப்பட்ட மகளை கருணை கொலை செய்ய பெற்றோர் கோர்ட்டில் மனு

சித்தூர் மாவட்டம் மதனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன், விவசாய தொழிலாளி. இவரது மனைவி சியாமளா. இவர்களுக்கு ரேவதி (21) மாதவி (16) ஆகிய 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

Parents-move-court-for-euthanasia-of-daughter_SECVPF

பிளஸ்2 மாணவி மாதவிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. பரிசோதனையில் அவர் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாதவிக்கு திருப்பதி, ஐதராபாத், சென்னையில் ஆஸ்பத்திரிகளில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் ரத்த புற்று நோயை குணப்படுத்த முடியவில்லை.

பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாதவியை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சைக்கு ரூ. 6 லட்சம் செலவாகும் என்று தெரிவித்தனர்.

தொழிலாளியான நாராயணா ஏற்கனவே ரூ.10 லட்சம் வரை செலவு செய்திருந்தார். இன்னும் ரூ.6 லட்சத்துக்கு அவரிடம் பணம் இல்லை. இதனால் மனம் உடைந்த பெற்றோர் மதனபள்ளி மாஜிஸ்திரேட் கோர்ட்டில், மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர்.

அதில், புற்று நோயால் பாதிக்கப்பட்ட மகளின் கஷ்டத்தை பொறுத்து கொள்ள முடியவில்லை. அவளை காப்பாற்ற பண வசதியும் இல்லை. எனவே மகளை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயராஜ் அதை தள்ளுபடி செய்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top