கிரானைட் முறைகேடு வழக்கு: 2,426 பக்க குற்றப்பத்திரிகை மேலூர் கோர்ட்டில் இன்று தாக்கல்

மதுரை மாவட்டம் மேலூர், கீழவளவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்தது, பதுக்கி வைத்தது உள்ளிட்டவற்றில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்த அப்போதைய கலெக்டர் அன்சுல்மிஸ்ரா உத்தரவிட்டார்.

granite-scam-2426-page-charge-sheet-filed-in-Melur-court_SECVPF

இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பி.ஆர்.பி. கிரானைட்ஸ் உள்ளிட்ட பல கிரானைட் நிறுவனங்கள் கிரானைட் மோசடி மற்றும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பி.ஆர்.பி. உள்ளிட்ட பல்வேறு கிரானைட் நிறுவனங்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன. அந்த நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டனர்.

கிரானைட் முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் பி.ஆர்.பி. கிரானைட், பி.கே.எஸ்.கிரானைட், ஆனந்த் கிரானைட் ஆகிய நிறுவனங்கள் அரசுக்கு 1398.37 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்திய வழக்குகளும் அடங்கும்.

இந்த 3 நிறுவனங்களின் மீதான வழக்குகளின் குற்றப்பத்திரிகை இன்று (செவ்வாய்க்கிழமை) மேலூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அரசு வக்கீல் ஷீலா, தனிப்படை ஆய்வாளர்கள் பிரகாஷ், ராஜாசிங் ஆகியோர் 2426 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 3 நிறுவனங்களின் வங்கி பரிவர்த்தனைகள், ஏற்றுமதி, இறக்குமதி ஆவணங்கள், வரி செலுத்திய விவரங்கள் போன்றவையும், நீதிபதி செல்வக்குமார் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

32 comments

  1. Very nice account of your first christma s with larry. I was able to envision it all even the dogs running around and the lady with the burning throat. Nice, Mary Jane but I am not suprise you are talented in many waatseyHher

  2. I thouhgt finding this would be so arduous but it’s a breeze!

  3. Essays like this are so important to brdenaoing people’s horizons.

  4. Wonderful exaoanptiln of facts available here.

Your email address will not be published.

Scroll To Top