சுவாதி கொலைக்கும் எனக்கும் துளியும் சம்பந்தமில்லை: ராம்குமார்

ramkumart

சுவாதி கொலைக்கும், எனக்கும் துளியும் சம்பந்தமில்லை என்று நெல்லையில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், வழக்குரைஞர் ஜி. கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், சென்னை நுங்கம்பாக்கத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும், எனக்கும் துளியும் சம்பந்தமில்லை. உண்மையான குற்றவாளியை காப்பாற்றவே, காவல்துறையினர் என்னை கைது செய்துள்ளனர்.

சுவாதி கொலைக் குற்றவாளியை கைது செய்ய நீதிமன்றம் காலக்கெடு விதித்ததாலேயே என்னை காவல்துறையினர் கைது செய்தனர்.

கொலை சம்பவம் நடைபெறவதற்கு 2 நாட்களுக்கு முன்பே, சுவாதியை யாரோ தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் மனுவியில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தையே உலுக்கிய சுவாதி கொலை சம்பவத்தில், புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top