சமஸ்கிருதத் திணிப்புக்கு எதிர்ப்பு – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது!

hh

சமஸ்கிருதத் திணிப்பை கண்டித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சமஸ்கிருதத்தில் அறிவியல் கருத்துக்கள் இருப்பதாகக் கூறி அதைக் கல்வி நிலையங்களில் திணிப்பதாகப் பல்வேறு பிரிவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

மத்திய அரசின் சமஸ்கிருதத் திணிப்பு முயற்சியைக் கண்டித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றதையடுத்து அவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top