சிவகாசியில் தொடர் தீ விபத்து: இருவர் சாவு; 5 பேர் காயம்

sivakasi fire 1

சிவகாசியில் தொடர் தீ விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். இதில் பல கடைகள் எரிந்து போனது.

சிவகாசி பாரதி நகரில் ஜெகதீஸன் (35) என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் சனிக்கிழமை இரவு சுமார் 9.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து கடையின் பின்புறம் உள்ள பட்டாசு குடோனிலும் தீ மளமளவென பரவியது.

தொடந்து ஒரு ஆட்டோ உதிரிபாகங்கள் கடை, வங்கி ஏ.டி.எம், ஆப்செட் அச்சகம் ஆகியவற்றிக்கும் தீ பரவியது. இதையடுத்து அருகில் இந்த ஸ்கேயரிங் இயந்திரப்பகுதிக்கும் தீ பரவியது. தொடந்து அந்த கட்டிடத்தில் உள்ள செல்லிடை பேசி டவருக்கும் தீ பரவியது. இதில் அந்த டவர் கீழே சரிந்து விழுந்தது.

இந்த தீ விபத்தில் தீப்பொறி வெடித்து சிதறியல் அப்பகுதியில் நடத்து சென்ற தங்கவேலு(50) முத்தையா(53) ஆகியோர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் ஆல்வின்(37), ஆத்தியப்பன்(38), இவரது பிள்ளைகள் பார்த்திபன்(10), வினோத்குமார்(15), பாண்டித்துரை (15) ஆகியோர் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய ஊர்களிலிருந்து தீயணைப்பு படையினர் வந்து தீயை சுமார் 5 மணிநேரம் போராட்டி அணைத்தனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை தீ விபத்து நடைபெற்ற இடத்தில் புகைவந்த பகுதியில் தீயணைப்பு படையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீ பரவாமல் தடுத்தனர்.

இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸார் பட்டாசு கடையில் எப்படி தீ பிடித்தது என விசாரணை நடத்தி வருகிறார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top