சிம்புவின் வாலு படத்தில் நடிக்க இழுத்தடிப்பு: நடிகை ஹன்சிகா மீது புகார்!

simbu-hanshikaநடிகர் சிம்பு கதாநாயகனாக நடித்து வரும் ‘வாலு’ படத்துக்கு கால்ஷீட் தராமல் இழுத்தடிப்பதாக நடிகை ஹன்சிகா மீது பட அதிபர், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்துள்ளார்.

நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி என்பவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, ‘வாலு’  என்ற படத்தை தயாரிக்க தொடங்கினார். இந்த படத்தின் சிம்பு- ஹன்சிகா நடித்து வருகின்றனர். விஜய் சந்தர் இயக்கி வருகிறார்.

படத்தின் பாடல் காட்சி தவிர, மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. ‘வாலு’ படத்தின் படப்பிடிப்பின்போதுதான் சிம்புவுக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் நெருங்கிப் பழகினார்கள். எவ்வளவு வேகத்தில் அவர்களின் காதல் வளர்ந்ததோ அதே வேகத்தில்  முறிந்தும் போனது.

சில காரணங்களால் இருவரும் பிரிகிறோம் என்று சிம்பு அறிக்கை விடுத்தார். அதன்பிறகு, ‘வாலு’ படம் வளர்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், ‘வாலு’ படத்தை தயாரித்து வரும் ‘நிக் ஆர்ட்ஸ்’ சக்ரவர்த்தி, ஹன்சிகா மீது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்து இருக்கிறார். அந்த புகாரில், “”வாலு படத்துக்காக ஹன்சிகாவுக்கு ரூ.70 லட்சம் சம்பளம் பேசப்பட்டு, அதில் ரூ.55 லட்சத்தை கொடுத்து விட்டேன். பாடல் காட்சியை படமாக்கி முடித்ததும் மீதி ரூ.15 லட்சத்தை தந்து விடுகிறேன் என்று கூறினேன்.

ஹன்சிகா, ‘வாலு’ படத்துக்கு கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறார். அவரால் மே அல்லது ஜூன் மாதம்தான் கால்ஷீட் தர முடியும் என்று கூறுகிறார். அவ்வளவு நாட்கள் தாமதமானால் எனக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே ஹன்சிகாவின் கால்ஷீட்டை உடனடியாக பெற்று தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top