சைமா விருது 2016: விக்ரம், நயன்தாராவுக்கு விருது

201607021751269930_Siima-Award-2016-Vikram-Nayanthara-award-winning_SECVPF

சைமா விருது வழங்கும் விழா கடந்த இரண்டு நாட்களாக சிங்கப்பூரில் சிறப்பாக நடைபெற்று வந்தது. இதில் தமிழில் கடந்த வருடம் வெளியான படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் சிறந்த நடிகராக ‘ஐ’ படத்தில் நடித்த விக்ரமுக்கு வழங்கப்பட்டது. அதுபோல், ‘நானும் ரௌடிதான்’ படத்தில் நடித்த நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. ‘நானும் ரௌடிதான்’ படத்திற்கு மட்டும் 5 விருதுகள் கிடைத்துள்ளது.

மேலும் விருது பெற்ற தமிழ் கலைஞர்களின் முழு பட்டியலை கீழே பார்ப்போம்.

சிறந்த படம்: தனி ஒருவன்
சிறந்த நடிகர்: விக்ரம் (ஐ)
சிறந்த நடிகை: நயன்தாரா (நானும் ரெளடிதான்)
சிறந்த நடிகர் சிறப்பு விருது: ஜெயம் ரவி (தனி ஒருவன்)
சிறந்த துணை நடிகர்: பிரகாஷ் ராஜ் (ஓகே கண்மணி)
சிறந்த துணை நடிகை: ராதிகா சரத்குமார் (தங்கமகன்)
சிறந்த பாடகர்: அனிருத் (நானும் ரெளடிதான் – தங்கமே)
சிறந்த பாடகி: ஸ்வேதா மேனன் (தங்கமகன் – என்ன சொல்ல)
சிறந்த இசையமைப்பாளர்: அனிருத் (நானும் ரெளடிதான்)
சிறந்த பாடலாசிரியர்: வைரமுத்து
சிறந்த வில்லன்: அருண் விஜய் (என்னை அறிந்தால்)
சிறந்த காமெடி நடிகர்: ஆர்ஜே பாலாஜி (நானும் ரெளடிதான்)
சிறந்த அறிமுக நடிகர்: ஜி.வி.பிரகாஷ் (டார்லிங்)
சிறந்த அறிமுக நடிகை: கீர்த்தி சுரேஷ் (இது என்ன மாயம்)
சிறந்த நடிகை சிறப்பு விருது: நித்யாமேனன் (ஓகே கண்மணி)
சிறந்த இயக்குனர்: விக்னேஷ் சிவன் (நானும் ரெளடிதான்)
வாழ்நாள் சாதனையாளர் விருது: பஞ்சு அருணாச்சலம்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top