ஐசிசி பதவியை துறந்தார் ரவி சாஸ்திரி

THMVS_RAVI_SHASTRI_2067025f

ஐசிசி கிரிக்கெட் கமிட்டியில் ஊடகப் பிரதிநிதியாக இடம்பெற்றிருந்த ரவி சாஸ்திரி, அந்தப் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி கிடைக்காததால் ஏற்பட்ட ஏமாற்றத்தின் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக ரவி சாஸ்திரி கூறியிருப்பதாவது: நான் எனது ராஜிநாமா கடிதத்தை சமர்ப்பித்துவிட்டேன். தொலைக்காட்சி வர்ணனையாளர் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் இருப்பதால் 6 ஆண்டுகளாக வகித்து வந்த ஐசிசி ஊடகத் தொடர்பாளர் பணியை ராஜிநாமா செய்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி கிடைக்காதது, அதைத் தொடர்ந்து கங்குலியுடன் ஏற்பட்ட மோதல் ஆகியவற்றின் காரணமாகவே ரவி சாஸ்திரி ஐசிசி பதவியை துறந்துள்ளார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: கங்குலியைப் போலவே, ரவி சாஸ்திரியும் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர். பயிற்சியாளர் பதவி கிடைக்காமல் போனதை சாஸ்திரியால் ஜீரணிக்க முடியவில்லை. பிசிசிஐயின் பிரதிநிதியாகவே ஐசிசி ஊடகத் தொடர்பாளர் பணியில் ரவி சாஸ்திரி, இருந்தார். அதனால் அதில் நீடிக்க விரும்பாமல் பதவியை ராஜிநாமா செய்திருக்கலாம். இந்திய அணியின் புதிய பயிற்சியாளரான அனில் கும்ப்ளே, ஐசிசி கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். அதனால் ஐசிசி கூட்டங்களில் கும்ப்ளேவுடன் கலந்துகொள்வது சரியாக இருக்காது என சாஸ்திரி நினைத்திருக்கலாம் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top