ஜோகோவிச்சைத் தோற்கடிக்கமுடியும்: ஃபெடரர் நம்பிக்கை

federer-reaction-rome-2016-thursday

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 3-வது சுற்றில் வெற்றி கண்டுள்ளார். இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 3-வது சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 6-4, 6-2, 6-2 என்ற நேர்செட்களில் டேனியல் இவான்ஸை வீழ்த்தினார். இதன்மூலம் அவர் நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஃபெடரரும் ஜோகோவிச்சும் தொடர்ந்து வெற்றி பெற்றால், அரையிறுதியில் மோதமுடியும்.

இந்தப் போட்டி குறித்து ஃபெடரர் கூறும்போது: நாம் எளிதில் நினைத்துவிட்டோம், ஜோகோவிச்சைத் தோற்கமுடியாது என்று. ஆனால் அவரை நிச்சயமாகத் தோற்கடிக்கமுடியும். அவரால் டென்னிஸில் தொடர்ந்து 200 போட்டிகளில் ஜெயிக்கமுடியாது. ஒருநாள் தோல்விகளை அடையத்தான்வேண்டும். ஆனால் அவர் தோற்கவில்லை. அதுதான் அவருடைய சிறப்பு என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top