குற்றவியல் வழக்குகளை புலனாய்வு செய்ய தவறிய ஜப்பான் காவல்துறை

160701163431_japan_640x360_afp

ஜப்பானின் காவல்துறை மாவட்டம் ஒன்றில் இரண்டாயிரத்திற்கு அதிகமான குற்றவியல் வழங்குகளை புலனாய்வு செய்வதில் காவல்துறை தவறியதால், புலனாய்வு செய்கின்ற சட்ட கால வரையறை முடிந்து, இந்த வழக்குகளை விசாரித்து தண்டனை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஜப்பானின் ஒசாகா காவல்துறை மாவட்டத்தில், கடந்த நான்கு தசாப்தக் காலமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ள வழக்குகளில், 10 கொலைகள் 120 பாலியல் வல்லுறவு வழக்குகள் அடங்குகின்றன.

ஒரு காவல் நிலையத்தின் சேமிப்பறையில் மட்டும், 20 குற்றவியல் வழக்குகளில் மறந்துபோன சாட்சியங்கள் இருந்ததை கண்டறிந்த பிறகு, அந்த மாவட்டத்தின் தொடரப்படாத வழக்குகளை காவல்துறை ஆராயத் தொடங்கியது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top