இந்தியாவின் மீது தொடரும் தேசிய இனங்களின் குற்றச்சாட்டுகள்!

ஜெனிவாவில் ஜூன் 13 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் 32 ஆவது கூட்டம் இன்றுடன் முடிவடைகிறது. பெண்களின் மீதான வன்முறைகள் தொடங்கி பல்வேறு மனித உரிமை மீறல்கள் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள், இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன.

12805836_10208926048689862_630432664767640887_n

இந்த மனித உரிமைகள் அமர்வில் இந்தியாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பெருமளவில் இந்தியாவால் ஒடுக்கப்படும் தேசிய இனங்களால் வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்து இருக்கிறது. குற்றச்சாட்டுகளில் பெருமளவு காஷ்மீரைச் சேர்ந்த மனித உரிமையாளர்களுடையது. காஷ்மீர் பகுதிகளில் இந்திய ராணுவம் செய்யும் கொலைகளை பற்றிய பதிவுகளை அவர்கள் தொடர்ந்து அங்கு பதிந்து இருப்பது தெரிகிறது.

அதனை அடுத்து திரிபுராவைச் சேர்ந்தவர்கள் குற்றச்சாட்டுகளை பதிந்து இருப்பதாக தெரிகிறது. மணிப்பூரில் நிகழும் உரிமை மீறல்கள், AFSPA சட்டங்கள் குறித்து ஐரோம் சர்மிளாவின் சகோதரர் கடந்த வாரத்திலும் இன்றும் பதிவு செய்து இருக்கிறார்.

மராத்தியத்தில் இருந்து ஒடுக்கப்பட்டோர் அமைப்பு வட இந்தியாவில் நிகழும் ஆணவப்படுகொலைகளை பதிவு செய்து இருக்கிறார்கள். குறிப்பாக ஐ.நா மனித உரிமை அமைப்பில் தலித் அமைப்பின் அங்கீகாரத்தினை இந்திய அரசு கடந்த 4 வருடங்களாக தடுத்து வருவதை ஐ.நாவில் சிலர் பதிவு செய்து இருக்கிறார்கள்.

மேலும் அஸ்ஸாமில் நிகழ்த்தப்படும் குடியேற்றங்கள், ஆக்கிரமிப்புகள், உரிமை மீறல்களை பற்றியும் ஒருவர் பேசி இருக்கிறார்.

தமிழகத்தை பொறுத்த வரையில் 20 தமிழர் படுகொலையையும், தமிழகத்தில் மிக மோசமாக நடத்தப்படும் ஈழத்தமிழர் அகதிகளையும், ஆணவப்படுகொலைகளையும் மே 17 இயக்கம் பதிவு செய்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தொடர்ந்து வரும் இந்தியாவின் மீதான தேசிய இனங்களின் குற்றச்சாட்டுகள், சர்வதேச அரங்கில் இந்தியாவின் வேடத்தை, தேசிய இனங்களின் மீதான இந்தியாவின் ஒடுக்குமுறைகளை தோலுரித்து காட்டுவதாக இருக்கும் என்று தெரிகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top