தெலுங்கானா மாநிலத்தில் நீதிபதிகள் போராட்டத்தால் கோர்ட்டு பணிகள் பாதிப்பு

ஆந்திர மாநிலத்தில் இருந்து பல நீதிபதிகள் உள்ளிட்ட நீதித்துறை ஊழியர்கள் தெலுங்கானா மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கானா நீதிபதிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து 11 நீதிபதிகளை ஐதராபாத் ஐகோர்ட்டு இடைநீக்கம் செய்தது.

Telangana-advocates-holding-placards-at-a-protest-in-front_SECVPFஇதனை கண்டித்து 200-க்கும் மேற்பட்ட நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அலுவலர்கள் ஒட்டுமொத்தமாக 15 நாட்களுக்கு தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்போவதாக நேற்று முன்தினம் அறிவித்தனர்.இதன்படி நேற்று நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாநிலம் முழுவதும் பெரும்பாலான கோர்ட்டுகளில் பணிகள் பாதிக்கப்பட்டன.

வழக்கு விசாரணை நடைபெறாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள கோர்ட்டு வளாகங்களில் வக்கீல்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top