சென்னையில் வக்கீல்கள் ரெயில் மறியல் போராட்டம்

வக்கீல்கள் சட்டத்தில் சில திருத்தங்களை ஐகோர்ட்டு கடந்த மாதம் வெளியிட்டது. இந்த சட்டத்திருத்தத்துக்கு தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

awyers-rail-blockade-in-Chennai_SECVPFஇதை திரும்ப பெறக் கோரி வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பல மாவட்டங்களில் கடந்த 1-ந்தேதி முதல் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் நேற்று முதல் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சட்ட திருத்தத்தை திரும்பபெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஜார்ஜ்டவுன் வக்கீல்கள் சங்க தலைவர் கருணாகரன், செயலாளர் வேல்முருகன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ரெயில் மறியலில் ஈடுபடுவதற்காக கடற்கரை ரெயில் நிலையம் சென்றனர். அவர்களை ராஜாஜி சாலையில் போலீசார் வழிமறித்து கைது செய்தனர். அவர்கள் அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

தாம்பரம் ஒருங்கிணைந்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கம் சார்பில் ஸ்ரீராமன் தலைமையில் 80 வக்கீல்கள் தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு சென்றனர்.

ரெயிலை மறிக்க சென்ற அவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 80 வக்கீல்கலும் திருமண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பூந்தமல்லி பார்கவுன்சில் தலைவர் ரமணி தலைமையில் 75-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஆவடி ரெயில் நிலையம் சென்றனர்.

ரெயில் நிலையம் அருகே அவர்களை போலீசார் தடுத்து கைது செய்தனர்.

பொன்னேரி ரெயில் நிலையத்தில் மறியல் செய்ய 100-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் திரண்டு வந்தனர். இதனால் ரெயில் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்ற வக்கீல்களை போலீசார் தடுத்தனர். ஆனால் அதையும் மீறி ரெயில் நிலையத்துக்குள் நுழைந்த அவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து சென்னை-கும்மிடிப்பூண்டி ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட வக்கீல்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். இந்த மறியலால் ரெயில்கள் தாமதமாக புறப்பட்டன.

சேலத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்ட வக்கீல்கள் 110 பேர் கைது செய்யப்பட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top