சுவாதி கொலை வழக்கு: காவல்துறை உதவி எண்கள் அறிவிப்பு

swathi2

மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில்,  கொலையாளி பற்றி துப்பு கொடுத்தால் விசாரணைக்கும் உதவியாக இருக்கும் வகையில் காவல்துறை உதவி எண்களை அறிவித்துள்ளன.

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-இல் மர்ம நபரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு சென்னை பெருநகர காவல் துறைக்கு மாற்றப்படுத்தப்பட்டதும் விசாரணை துரிதமாக நடைபெற்று வருகிறது.

சுவாதி கொலை செய்யப்படும்போது, அங்கு 20-க்கும் மேற்பட்டவர்கள் இருந்துள்ளனர். ரயிலும் வந்து சென்றுள்ளது.

அந்த நேரத்தில் யாரேனும் செல்லிடப்பேசியில் கொலையாளியை ஏதேனும் புகைப்படம் எடுத்திருந்தாலோ அல்லது கொலையாளியைப் பார்த்திருந்தாலோ தகவல் அளிக்க விரும்புவோர் தகவல் அளித்தால் குற்றவாளியை அதிவிரைவில் கைது செய்வதற்கான வாய்ப்புள்ளது. தகவல் அளிப்பவர்களின் பெயர் ரகசியமாகவே வைக்கப்படும்.

கொலையாளியின் புகைப்படமோ, விடியோ காட்சியோ செல்லிடப்பேசி கேமராவில் எடுத்திருந்தால், அதை வாட்ஸ் அப்’ மூலமும் கீழ்கண்ட காவல் துறை உயர் அதிகாரிகளின் செல்லிடப்பேசி எண்களுக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் ஆணையர் கே.சங்கர் – 89399 66985

இணை ஆணையர் எஸ்.மனோகரன் – 94981 78179

துணை ஆணையர் பி.பெருமாள் – 94434 81933

உதவி ஆணையர் கே.பி.எஸ்.தேவராஜ் – 98401 90505

உதவி ஆணையர் பி.கலிதீர்த்தான் – 97518 04830

உதவி ஆணையர் எஸ்.முத்துவேல்பாண்டியன் – 98840 70878

இதற்கிடையே, சுவாதி கொலை வழக்கு தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் சென்னை மற்றும் ரயில்வே காவல்துறைக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அடுத்த 2 வாரங்களில் இதுபற்றி விளக்கம் அளிக்கும்படியும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top