6 நாடுகள் ஹாக்கி: அயர்லாந்தை 2-1 என இந்தியா வீழ்த்தியது

ஸ்பெயின் நாட்டில் 6 நாடுகள் பங்கேற்கும் ‘6 நாடுகள் இன்விடேசன் ஹாக்கி’ தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா ஜெர்மனியிடம் 0-4 என தோல்வியடைந்தது. இந்நிலையில் இன்று அயர்லாந்தை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் இந்தியாவிற்கு அயர்லாந்து அதிர்ச்சி கொடுத்தது.

அந்த அணியின் கைல் குட் முதல் கோலை அடித்தார். 20-வது நிமிடத்தில் இந்தியாவிற்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்தி தல்விந்தர் சிங் கோல் அடித்தார். இதனால் இந்தியா 1-1 என சமநிலைப் படுத்தியது. அதன்பின் சர்தார் சிங் 32-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

அதன்பின்னர் இரு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. எனவே, இறுதியில் இந்தியா 2-1 என வெற்றி பெற்றது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நியூசிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top