தமிழகத்தில் நடைபெறும் ஜாதிய ஆணவப்படுகொலைக்கு எதிராக ஐநாவில் எழுப்பப்பட்ட உரத்த குரல்¬; தனிச் சட்டம் இயற்றப்படுமா ?

தமிழகத்தில் நடைபெறும் ஜாதிய ஆணவப்படுகொலைக்கு எதிராக ஐநாவில் குரல்­

ஐ.நா மனித உரிமை அரங்கில் தமிழகத்தில் நடைபெறும் ஜாதிய ஆணவப்படுகொலைகளைப் பற்றி மே பதினேழு இயக்கத்தின் சார்பாக அந்த இயக்கத்தின் ஒருங்கிணப்பாளர் பதிவு செய்துள்ளார்.

ddd

இது தொடர்பாக ஜெனிவாவில் நடைபெற்று வரும் 32 ஆவது மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் பேசியுள்ள தோழர் திருமுருகன் காந்தி,

“சாதி ஆணவப் படுகொலைகள் தமிழ்நாட்டில் அதிகரித்து வந்துள்ளதையும் நாங்கள் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம். தாழ்த்தப்பட்ட தலித் இளைஞரான சங்கர் சாதி இந்து வீட்டுப் பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்காக கொடூரமான முறையில் சமீபத்தில் கொல்லப்பட்டது உட்பட, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் குறைந்தது 81 சாதி ஆணவப் படுகொலைகள் நடந்தேறி உள்ளன. தாழ்த்தப்பட்ட தலித் ஆண்களோ /பெண்களோ சாதி இந்து வீட்டிப் பெண்களை/ஆண்களை திருமணம் செய்து கொள்ளும் போது இப்படிப்பட்ட கொலைகள் நடந்துள்ளன. எல்லா சம்பவங்களிலுமே பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகவே உள்ளனர். இப்படிப்பட்ட சாதி ஆணவப் படுகொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும், இந்திய மற்றும் தமிழக அரசாங்கம் இதற்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க முன்வராததால், சாதி இந்து வெறி உயிர்ப்புடன் வளர்ந்து வருகின்றது. இது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கையை நரகமாக்கியுள்ளது.

சாதி இந்துக்களின் சாதி ஆணவக் கொலைகளைக் களைய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்துமாறு இந்த மன்றத்தைக் கேட்டு கொள்கின்றோம்” என்று பேசி இருக்கிறார்.

இது இந்திய மற்றும் தமிழக அரசுகளுக்கு ஜாதிய ஆணவப்படுகொலைக்கு எதிரான மிகபெரிய அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top