ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் நீதி கோரப்பட்டது; வழக்கு சி.பி.ஐ க்கு மாற்றப்படுமா?

ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களுக்கு நீதி வேண்டும்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அரங்கில் தமிழகத்தின் பிரச்சனைகளை மே பதினேழு இயக்கம் பதிவு செய்துள்ளது.

ll

ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் ஆணையத்தின் 32 ஆவது அமர்வில் ஆந்திர அரசின் பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களை பற்றியும் தொடர்ந்து தமிழக தொழிலார்கள் ஆந்திராவில் படுகொலை செயப்படுவது பற்றியும் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி பேசி இருக்கிறார்.

அந்த உரையின் தமிழாக்கம் :

“இந்தியாவில் இருக்கும் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து இந்த அரங்கின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். ஏப்ரல் 7  2015 அன்று தமிழ் நாட்டைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்கள், சேசாச்சலம் வனப்பகுதியில் ஆந்திர காவல் துறை, வனத்துறை மற்றும் சிறப்பு ப்படை ஆகியவற்றால் படுகொலை செய்யப்பட்டனர். ஓய்வு பெற்ற மும்பை உச்ச நீதி மன்ற நீதிபதி திரு.எச்.சுரேஷ் அவர்கள் தலைமையில் செயல்பட்ட உண்மை கண்டறியும் குழு தமிழர் படுகொலையில் மேற்கூறப்பட்ட மூன்று அரசாங்க நிறுவனங்களும் அதன் அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளாதக குற்றம் சாட்டியது. இதே கருத்தை தேசிய மனித உரிமை ஆணையமும் (NHRC) கூறியது.

கொல்லப்பட்ட தமிழர்களின் உடலின் கழுத்து மற்றும் மேற்பகுதியில் குண்டடி பட்டுள்ளது அவர்கள் அருகாமையில் இருந்து சுட்டுக் கொல்லபட்டதைக் காட்டுகின்றது. கொல்லப்பட்டவர்களின் உடலில் அவர்கள் கைகள் கட்டப்பட்டதற்கான தடங்கள் உள்ளன. மேலும் கொல்லப்பட்டவர்களின் கை, கால்கள், மூக்கு, விரல்கள் வெட்டப்பட்டும், பற்கள் உடைக்கப்பட்டும் இருந்ததாக கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் பதிவு செய்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் ஆந்திர காவல் துறையால் அழைத்துச் செல்லப்பட்டதை நேரில் கண்டதை சிலர் சாட்சியம் அளித்துள்ளனர்.

2002 இல் இதே போல் 7 தமிழ் தொழிலாளர்கள் இதே அரசு நிறுவனங்களால் கொல்லப்பட்டனர். கடந்த 15 ஆண்டுகளாக பல தமிழ் தொழிலாளர்கள் காணாமல் போவதாக தொடர்ந்து தகவல்கள் வந்துள்ளன. பல மாநிலங்களை மொழி பேசும் தொழிலாளர்கள் அங்கு பணி புரியும் சூழலில், தமிழர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு காணமலடிக்கப்படவும், கொலையும் செய்யப்படுகின்றனர்.

ஆந்திர அரசின் புலனாய்வு குழு இந்த படுகொலைக்கும் அரசுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறியுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையும் பரிந்துரைத்த பின்பும் இந்திய அரசாங்கம் நடுநிலையான ஒரு விரசாரணையை தொடங்க தயாராக இல்லை. நீதி வழங்க யாருக்கும் அக்கரை இல்லை என்பதை இது தெளிவாக காட்டுகின்றது. ஆந்திர மாநில அரச பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்க தகுந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும்”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இது ‘துப்பு துலங்கவில்லை’ என்று கூறி வழக்கை முடிக்க பார்க்கும் ஆந்திர காவல் துறைக்கு மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. மேலும், சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று இந்த வழக்கு சி.பி.ஐ க்கு மாற்றப்படுமா என்பது தான் கேள்வியாக உள்ளது .


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top