சுயவிளம்பரம், கட்சி கட்டுப்பாட்டை மீறுவதாக சுப்பிரமணியன் சாமிக்கு மோடி கண்டிப்பு

Narendra_Modi_PTI
கடந்த சில வாரங்களாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார். ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் மீது கடும் குற்றசாட்டுகளை கூறிவந்த அவர், பின்னர் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் மீதும், நிதி மந்திரி அருண் ஜெட்லி மீதும் தனது கவனத்தை திருப்பினார். குறிப்பாக நிதி மந்திரி அருண் ஜெட்லி பற்றி சாமியின் கருத்துகள் கட்சியின் மேலிடத்தை சங்கடத்திற்குள்ளாக்கியது.

இந்நிலையில் இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, “கட்சியை விட யாரும் பெரியவர்கள் கிடையாது. சுய விளம்பரத்திற்காக சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஒருவர் வெளியிட்டால் அது தவறு. நான் அதில் தெளிவாக இருக்கிறேன்.

என்னுடைய கட்சியை சேர்ந்தவரா இல்லையா என்பதை விட இது பொருத்தமற்ற செயல். சுயவிளம்பரத்தின் மீதான ஆசை நாட்டுக்கு நல்லது இல்லை. மக்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். யாராவது தங்களை அனைத்தையும் விட உயர்வாக எண்ணிக்கொண்டால் அது தவறு” என்று சுப்பிரமணியன் சாமியை பிரதமர் மோடி மறைமுகமாக கண்டித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top