தொழிற் கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பினுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

160623085906_jeremy_corbyn_624x351_getty_nocredit

மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவுகளை தொடர்ந்து, பிரிட்டனில் எதிர்கட்சியான தொழிற் கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை அக்கட்சியை சேர்ந்த இரு எம்.பிக்கள் சமர்ப்பித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இணைந்திருக்க வேண்டும் என்ற அதிகாரபூர்வ கொள்கையை தொழிலாளர் கட்சி கொண்டிருந்த போதிலும், பாரம்பரியமாக தொழிற்கட்சியின் கோட்டையாக விளங்கிய வட இங்கிலாந்து மற்றும்

வேல்ஸ் ஆகிய பகுதிகளில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராக பெரிய அளவில் வாக்குகள் பதிவாகி இருந்தன.

இந்த முடிவுகள் குறித்து கோர்பினை கடுமையாக விமர்சித்துள்ள தொழிற்கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் டோனி பிளேர், இந்த முடிவுக்குக் காரணம் கோர்பினின் மந்தமான தலைமையே என்று கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய விவகாரத்தில், கோர்பின் போதிய அக்கறை காட்டவில்லை என மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கோர்பினின் தலைமைக்கு தற்போது ஒரு பெரிய சவால் ஒன்று எழுந்துள்ளதாக பிபிசியின் அரசியல் பிரிவு செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top