வேலையில்லா பட்டதாரிகளின் கல்வி கடனை அரசே ஏற்க வேண்டும்-ஜி.ராமகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

grகல்விக்கடன் வாங்கி உயர்கல்வி படித்த மாணவர்கள் எண்ணற்றோர் வேலை கிடைக்காமல் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கை அமலாக்கத்தின் காரணமாக படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அருகி வருகிறது. வேலை கிடைக்கும் சிறுபகுதியினருக்கும் கல்வித் தகுதிக்கேற்ற வேலையும், வருமானமும் கிடைக்காத நிலையில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில் கல்விக்கடனை வசூலிக்க பாரத ஸ்டேட் வங்கி மிகவும் கொடூரமான வழிமுறைகளை கையாளத் தொடங்கி உள்ளது. கல்விக்கடனை வசூலிக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுத்துறை நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி மேற்கொள்ளும் தவறான வழிமுறைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கெடுபிடி நடவடிக்கையினால் வேலை இல்லாத இளைஞர்களும், அவர் தம் குடும்பத்தினரும் எதிர்கொள்ள நேர்ந்துள்ள நெருக்கடியை கருத்தில் கொண்டு இப்பிரச்சனையில் தமிழக அரசு உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் எனவும், கல்விக்கடனை திருப்பிச் செலுத்த முடியாத மாணவர்கள் பெற்ற கல்விக் கடன்களை அரசே ஏற்க வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top