நாங்கள் 4 கட்சிகளும் நிரந்தர கூட்டு இயக்கமாக பயணத்தை தொடருவோம்: வைகோ பேச்சு

ம.தி.மு.க. சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க. சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புஹாரி தலைமை தாங்கினார்.

 

We-plan-to-continue-to-journey-4-parties-with-permanent_SECVPF

நிகழ்ச்சியில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக தென்றல் நிசார் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியை அ.நாசர் தொகுத்து வழங்கினார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிகழ்ச்சியில் பேசியதாவது:-

அரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சியாக ஆண்டுதோறும் ம.தி.மு.க. சார்பில் இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். தேர்தல் காலத்தில் சில கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் விலகிச்செல்லலாம். ஆனால் நாங்கள் 4 கட்சிகளும் நிரந்தர கூட்டு இயக்கமாக செயல்பட்டு வருவோம். இதை நாங்கள் முன்பே தெரிவித்துள்ளோம்.

மக்கள் நலக் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து எங்கள் பயணத்தை தொடருவோம். இந்த தேர்தல் களத்தில் ஏற்பட்ட தோல்வியை பற்றி நான் இங்கு பேச விரும்பவில்லை.

ஆனால், கீழே விழுந்தவன் எழ முடியாதா? என்ற கேள்வி எழுகிறது. இது அரசியலுக்கு அப்பாற்பட்டது. மல்யுத்தத்திலே விழுந்து விடலாம். உலக கோப்பை, யூரோ கோப்பை போன்ற போட்டிகளில் வெற்றிபெற்ற அணி தோல்வி அடைந்து விடலாம். தோல்வி அடைந்த அணி வெற்றி பெறலாம். இதே போன்று எங்கள் அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top