அம்மா கணக்கு

தொடர்ந்து படங்களை தயாரித்து வரும் தனுஷ் தற்போது Nil Battey Sannata என்கிற ஒரு  இந்தி படத்தை தமிழில் ரீமேக் செய்து நமக்காக அம்மா கணக்காக கொடுத்துள்ளார்.

கதை

கணக்கு என்றால் 10 அடி தள்ளி நிற்கும், சுத்தமாக படிப்பே ஏறாத தன் குழந்தையை படிக்க வைக்க தானும் அதே பள்ளிக்கு படிக்க செல்லும் தாயின் உணர்வு போராட்டமே இந்த அம்மா கணக்கு.

NTLRG_160312151325000000

படத்தை பற்றிய அலசல்

தனுஷ் சொல்லியதை போல அமலா பாலிற்கு அவரின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம் இந்த அம்மா கணக்கு. தன் கதாப்பாத்திரத்தை நன்கு உணர்ந்து நடித்து கணக்கில் 100 வாங்குகிறார். ஆனால் இவர் யூனிஃபாம் அணிந்து வகுப்பறையில் அமர்ந்திருக்கும் போது ஏதோ +2 மாணவி 10ம் வகுப்பில் வந்து அமர்ந்ததை போல் தான் உள்ளார், அவ்வளவு இளமை. மகளாக வரும் யுவஸ்ரீ அமலாவிற்கே நடிப்பில் சவால் விடுகிறார். அம்மாவை போட்டியாக நினைக்கும் காட்சிகளும் சரி, அமலாவின் கனவை வகுப்பில் சொல்லி அழும்போதும் சரி மனதை கவர்கிறார். அர்ஜுனனுக்கு கிருஷ்னனைபோல இப்படத்தில் அமலாவிற்கு ரேவதி, இவரின் நடிப்பை பற்றி சொல்லியா தெரிய வேண்டும். மூக்கை புடைத்துக்கொண்டு அட்வைஸ் கொடுக்கும் கதாப்பாத்திரங்களுக்கு இடைவேலை விட்டுவிட்டு புது அவதாரம் எடுத்து கலக்கியுள்ளார் சமுத்திரகனி. அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் வரும் விஷால் தேவ் அமலாவிற்கு கணக்கும், யுவஸ்ரீக்கு அமலாவையும் புரியவைக்கும் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்.

இசைஞானி இளையராஜா தன் இசையின் மூலம் படத்தை மெருகேற்றியுள்ளார். கவேமிக் யு அரியின் ஒளிப்பதிவு நம்மை கதாப்பாத்திரங்களுக்கு நடுவில் உலவ விடுகிறது அவ்வளவு எதார்தம்.

தங்கள் கனவை பிள்ளைகள் மீது பெற்றோர்கள் தினிப்பதில்லை அவர்களின் கனவே பிள்ளைகள் தான் என்பதை மிகவும் எளிமையாக படமாக்கியதற்காகவே இயக்குனர் அஷ்வினி ஐயர் திவாரியை பூங்கொத்து கொடுத்து பாராட்டலாம். அதே சமயம் கல்வி எவ்வளவு முக்கியம் குறிப்பாக பெண்களுக்கு என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார்.

கணக்கு எப்படி மெதுவாக புரியுமோ அதேபோல் தான் இந்த அம்மா கணக்கும் மெதுவாக நகர்கிறது, சட்டென கதைக்கு சென்று இருக்கலாம். இது போன்ற படங்களுக்கு எதார்த்தம் மிக முக்கியம் அதனால் இன்னும் கொஞ்சம் கள ஆய்வு செய்திருக்கலாம். இதனாலேயே படத்துடன் ஒன்றி பார்க்க முடியாமல் போகிறது. “ஏழைகளுக்கு கனவுகள் இல்லை” என்பது போன்ற வசனங்கள் பேசும் அறிவு மிகுந்த (matured) மகள் அம்மா ஏன் கஷ்ட படுகிறார் என்பதை கூட புரிந்து கொள்ளாதது முரன்! மகளை படிக்க வைக்க பல வேலைகளுக்கு செல்லும் பெண் பள்ளிக்கு செல்ல எப்படி நேரம் இருக்கும், இது போன்ற காட்சிகளில் இன்னும் கொஞ்சம் தெளிவு இருந்திருக்கலாம். முதல் பாதியில் விட்டதை இரண்டாம் பாதியில் சரிகட்டியதால் படத்தின் நோக்கம் நிறைவேறியது என்றே கூறலாம்.

க்ளாப்ஸ்

பெண்களை முன்னிறுத்தி நல்ல கருத்தை சொல்ல முயற்சி செய்தது, நடிகர்களின் சிறப்பான பங்களிப்பு, படத்திலிருந்து தனியே தெரியாமல் சிறப்பான முறையில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள்.

பல்ப்ஸ்

எதார்தமும் திரைக்கதையில் சுவாரஸ்யமும் குறைந்து போனது, சில முரனான விஷயங்களும் பதிலற்ற கேள்விகளும், படத்தின் வேகமும்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top