மஞ்சள் காய்ச்சல் பரவுவதை தடுக்க அவசர தடுப்பூசி இயக்கம்

yellow-fever

உலக சுகாதார நிறுவனம், அங்கோலா மற்றும் காங்கோ நாடுகளின் எல்லைகளில், மஞ்சள் காய்ச்சல் பரவுவதை தடுக்க அவசர தடுப்பூசி இயக்கத்தைத் துவங்க உள்ளது.

இந்த பிரசாரம், அடுத்த சில வாரங்களில், தொற்று நோய் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள காங்கோவின் தலைநகரான கின்ஷசாவிலும் தொடங்கப்படவுள்ளது.

பத்து வருடங்களில் மிக மோசமான மஞ்சள் காய்ச்சல் பரவலாகக் கருதப்படும் இந்நோய் முதலில் அங்கோலாவில் பரவ தொடங்கியது, அங்கு இதுவரை சுமார் 350 பேர் பலியாகியுள்ளனர் . காங்கோவில் எழுபதுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

அங்கோலாவில் அதிக அளவில் நடத்தப்படும் தடுப்பூசி பிரசாரங்களால் உலக அளவில் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி சேமிப்பு பெருமளவு குறைந்துவிட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top