மேயர்களை உறுப்பினர்களே தேர்வு செய்யும் மசோதா பேரவையில் நிறைவேற்றம்!

மாநகராட்சி மேயர்களை, மாமன்ற உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கும் மசோதா, சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது

assembly_18

சட்டப்பேரவையில் நேற்று இம்மசோதாவை, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், பேரவையில் இன்று இம்மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. உறுப்பினர்கள் அவரவர் இடத்தில் எழுந்து நிற்க சொல்லி, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன் முடிவில், மசோதாவிற்கு 132 பேர் ஆதரவு தெரிவிப்பதாகவும், 88 பேர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறிய பேரவைத்தலைவர், மசோதா நிறைவேறியதாகவும் அறிவித்தார்.

இந்த மசோதா ஊழலுக்கு வழிவகுக்கும் என திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

இதேபோன்று, தொகுதிகளின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான உள்ளாட்சித் தேர்தல் மசோதாவும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மறு சீரமைப்பு, மறு சுழற்சி இல்லாத வகையில் தேர்தலை நடத்த சட்ட திருத்தம் வழி வகை செய்கிறது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், மறு தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top