என்எஸ்ஜி: சீன அதிபரிடம் இன்று ஆதரவு கோருகிறார் மோடி?

17modi_with_china_pres1

உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தரும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச இருக்கிறார்.

அப்போது அவரிடம் அணுசக்தி மூலப்பொருள்கள் விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராவதற்கு சீனா ஆதரவளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்துவார் எனத் தெரிகிறது.

சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 6 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் நோக்கம், பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதும், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதும் ஆகும். இந்தக் கூட்டமைப்பில் இந்தியாவும், பாகிஸ்தானும் இணையவுள்ளன.

இதற்காக தாஷ்கண்டில் 2 நாள்கள் நடைபெறவுள்ள அந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அப்போது சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை, அவர் சந்தித்து பேச இருக்கிறார்.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சன்னிங், பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

என்எஸ்ஜியில் இந்தியா உறுப்பினராவதற்கு சீனா முட்டுக்கட்டை போடுகிறது என்று கூறுவது தவறு. முட்டுக்கட்டை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது சரியல்ல.

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகள், என்எஸ்ஜியில் உறுப்பினராவதை நாங்கள் இதுவரை அறிந்ததில்லை. அதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

அதற்காக, இந்தியா நுழைவதற்கு நாங்கள் முட்டுக்கட்டை போடுகிறோம் என்று கூறுவது அர்த்தமற்றது.

அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகள், என்எஸ்ஜியில் சேருவது குறித்து அதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆலோசனையில் சீனா தரப்பில் இருந்து ஆக்கப்பூர்வமான முடிவு எடுக்கப்படும்’ என்றார் அவர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top