ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற்றம்?பிரிட்டனில் இன்று பொது வாக்கெடுப்பு

shutterstock_331126415_final

ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடாக நீடிக்கலாமா, வேண்டாமா என்பதற்கான முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு பிரிட்டனில் வியாழக்கிழமை (ஜூன் 23) நடைபெறுகிறது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

28 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் அங்கம் வகிக்கிறது.

அந்த அமைப்பில் பிரிட்டன் அங்கம் வகிப்பதற்கு எதிராக பிரிட்டனில் ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்த மக்களின் கருத்தை அறிவதற்கான பொதுவாக்கெடுப்பு வியாழக்கிழமை நடைபெறுகிறது.

“பிரெக்ஸிஸ்ட்’ என அழைக்கப்படும் இந்த பொது வாக்கெடுப்பில் பங்கேற்பதற்காக, இதுவரை இல்லாத அளவு 4.65 கோடி வாக்காளர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து பிரிட்டன் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஐரோப்பிய யூனியனுடன் தொடர்ந்து இணந்திருப்பது குறித்து முடிவெடுப்பதற்கான பொது வாக்கெடுப்பில் பங்கேற்பதற்காக 46,499,537 பேர் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

இது பிரிட்டன் வரலாற்றில் ஒரு சாதனை எண்ணிக்கையாகும்.

இதற்கு முன்னர், கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களின்

எண்ணிக்கை 46,354,197-ஆக இருந்ததுதான் சாதனை அளவாக இருந்தது என்று

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உள்ளே? வெளியே?

பொது வாக்கெடுப்புக்கு முந்தைய கருத்துக் கணிப்பில், 25 வயதுக்குட்பட்ட இளைய தலைமுறை வாக்காளர்கள் ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடாக பிரிட்டன் தொடர்ந்து நீடிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எனினும், 65 முதல் 74 வயது வரையிலான வாக்காளர்கள் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூழலில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து இணைந்திருப்பதற்கு ஆதரவாகவே பொது வாக்கெடுப்பின் முடிவு இருக்கும் என்று கூறப்படுகிறது.

எனினும், பிரிட்டனில் இளைஞர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே வாக்களிப்பதால் அவ்வாறு உறுதியாகக் கூறிவிட முடியாது என்றும் பார்வையாளர்கள் எச்சரிக்கின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top