ஈழத்தில் பொதுமக்கள் மீது கொத்துகுண்டுகள் வீசபட்டதற்கான ஆதாரங்கள் வெளியானது

ஈழத்தில் நடைபெற்ற தமிழினப்படுகொலையின் இறுதி கட்டத்தில் கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளன. அதன் மூலம் ராணுவம் அப்பாவி மக்கள் மீது தடை செய்யப்பட்ட ஆயுதங்களை உபயோகித்தது என்பதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

cluster_bomb_chalai_srilanka_main

2008 இன் பின் பகுதி மற்றும் 2009 இன் முன் பகுதிகளில் யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் இருந்து கண்ணிவெடி அகற்றும் குழுவால் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கப்பட்டுள்ள புகைப்பட ஆதாரங்களில் இவை தெரியவந்துள்ளன.

முன்னால் கண்ணிவெடி அகற்றும் நிபுணர்களின் கூற்றுப்படி, தாக்குதல் நடத்தப்படமாட்டாது என்று கூறி பொது மக்கள் மூன்று லட்சம் பேர் நோ ஃபயர் ஜோன் (No Fire Zones) என்று சொல்லக்கூடிய பகுதிகளில் திரட்டப்பட்டனர். அங்கும் ராணுவ தாக்குதல் நடந்து இருப்பது தெரியவந்துள்ளது.

4334இந்த இனப்படுகொலையில் ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். முக்கியமாக போரின் இறுதி காலகட்டத்தில் அதிக அளவிலான மக்கள் வன்னி நிலப்பரப்பில் கொல்லப்பட்டனர்.

இந்த ஆதாரங்கள் இறுதி யுத்தத்தின் போது அமைச்சரவையில் முக்கிய பொறுப்புக்களில் இருந்தவர்கள் முதல் தற்போது இருக்கும் இலங்கை அரசின் மீது வரை தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

மிக முக்கியமாக தற்போது அதிபராக இருக்கும் மைத்திரிபால சிரிசேனா தான், மஹிந்த ராஜபக்ஷே வெளிநாட்டில் இருந்ததால் போர் முடிவதற்கு முன்பு அவசரமாக பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவியேற்றார். ராஜபக்ஷேவின் சகோதரன் கோதபாய ராஜபக்ஷே பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்தவர்; போரினை திறம்பட இயக்கியதாக பாராட்டப்பட்டவர்.

சிரிசேனா வின் அமைச்சரவையில் மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் சரத் பொன்சேகா தான் ராணுவ தளபதி.

ஹேலோ என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் வெளியிடப்பட்டு இருக்கும் இந்த புகைப்படங்களில் பல்வேறு  பகுதிகளில் இருந்து கொத்துக் குண்டுகள் மற்றும் பெரிய பெரிய ஏவுகணைகள் உள்ளன.

இந்த ஆயுதங்களை பற்றிய தகவல்கள் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மூத்த ஆயுதங்கள் ஆராய்ச்சியாளரிடம் இருந்து பெறப்பட்டு இருக்கின்றன. அந்த படங்களில் இருந்தவை ரஷியாவில் தயாரிக்கப்பட்ட கொத்துக் குண்டுகள் மற்றும் வெடிக்காத கொத்துக் குண்டுகள் என்று கண்டறியப்பட்டுள்ளன.

மனித உரிமை ஆணையத்தின் 32 ஆவது கூட்டம் ஜெனிவாவில் சென்ற வாரம் தொடங்கியது. அதில், தற்போது வெளியாகி உள்ள ஆதாரங்களின் மூலம் கடைசி கட்ட போரில் இலங்கை அரசு மேற்கொண்ட அனைத்து போர் விதி மீறல்கள் குறித்து இலங்கை அரசின் மீது கேள்விகளை மிகத் தீவிரமாக எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு அறிக்கைகளும், அமைப்புகளும், தன்னார்வ நிறுவனங்களும் ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பித்து இருக்கும் தகவல்களின் படி யுத்தத்தில் மிகப்பெரிய அளவில் இலங்கை அரசு மனித உரிமை மீறலில் ஈடுபட்டு இருக்கிறது; இது ஒரு இனபடுகொலை என்று தொடர்ச்சியாக இலங்கை அரசிற்கு எதிராக ஆதாரங்கள் குற்றச்சாட்டுகள் எழுந்தாலும், இதுவரை அரசின் எந்த மூத்த அதிகாரியோ அல்லது ராணுவமோ அவர்கள் மீது வைக்கப்படும் பதில் கூறவில்லை.

புதுகுடியிருப்பு மற்றும் முல்லைவெட்டு பகுதிகளில் நடந்த இறுதி யுத்தத்தின் போது இலங்கை அரசு பொது மக்களை தாக்குதல் நடத்தப்படாது என்று உறுதி கூறி நோ ஃபயர் ஜோன் (No Fire Zones) என்ற இடங்களில் ஒன்று சேர்ந்து இருக்குமாறு கூறியது. அந்த இடம் மூன்று முறை மாற்றப்பட்டது. 52 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட சுதந்திரபுரம் என்ற இடத்தில் இருந்து மிகவும் குறுகலான இடத்திற்கு நகர்த்தப்பட்டது. ராணுவம் வெற்றிகளை ஈட்டும் போது இந்த இடம் குருகலாகிக் கொண்டே சென்றது.

ராணுவம் தொடர்ந்து மக்கள் மீதும் இந்த மாதிரியான தாக்குதல் நடத்தக்கூடாத இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் மூலம் 70000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என்பது தான் ஐக்கிய நாடுகள் சபையால் கொடுக்கப்பட்ட மற்றும் மற்ற நிறுவனங்களால் கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் மிகப் பிரதானமான குற்றச்சாட்டு.

முந்தைய இலங்கை அரசு கொத்துக் குண்டுகள் வீசியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை நிராகரித்தது. தற்போதைய சிரிசேனாவும் ராணுவம் சர்வதேச விதிப்படியே நடந்து கொண்டது என்று கூறி வந்தார்.

மேலும், போர் குற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் 2015 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட அறிக்கையில் இருந்த பரிந்துரையின் படி இலங்கை மற்றும் சர்வதேசம் இணைந்து நடத்தும் கலப்பு விசாரணையை கடுமையாக நிராகரித்த சிரிசேனா உள் நாட்டு விசாரணையே வேண்டும் என்கிறார்.

4672

கொத்துக் குண்டுகள் அவற்றின் வெடி திறன் மூலம் வேறுபடுகின்றன. ஒரு சிறிய கொத்துக் குண்டு மிகப்பெரிய பரப்பளவு நிலத்தை அழிக்க போதுமானது. எனவே, அவற்றின் இயற்கை குணமே கண்மூடித்தனமாக எங்கு அவை போடப்பட்டாலும் அங்கு இருக்கும் மக்களை கொன்றொழிப்பது தான். அதிக செரிவிலான மக்கள் இருக்கும் இடங்களில் கொத்துக் குண்டுகளை வீசுவதன் மூலம் பாரிய அளவிலான உயிர்கள் பலி ஆகும். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் எமன் நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை பற்றி ஒரு முறை இப்படி குறிப்பிட்டார்.

ஹேலோ தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்களின் கூற்றுப்படி மொத்தமாக ‘42 கொத்துக் குண்டுகள்’ யானையிறவைக்கு அருகில் வன்னிக்கு வடக்கே பச்சிலப்பள்ளி பகுதியில் மட்டும் 2011 மற்றும் 2012 ஆண்டுகளில் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த நிறுவனம் ஆயுதங்கள் குறித்த பெரிதான கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும் தாக்குதல் நடத்தப்படாது என்று உறுதி அளிக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் அவர்கள் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடவில்லை என்று கூறுகிறார்கள்.

இந்த படங்களின் மூல காரணமான இலங்கைக்கு வெளியே வாழும் நபர் கொத்துக் குண்டுகள் மூலம் கிளிநொச்சி மற்றும் சாலை பகுதிகளில் மிகக் கொடூரமான முறையில் இறுதி யுத்தத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுகிறார்.

போர் நடந்து கொண்டு இருக்கும் போதே கொத்துக் குண்டுகள் வன்னியை சுற்றிய நிறைய பகுதிகளில் வீசப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழும்பின. ஆனால், அவை அப்போது நிருபிக்கப்படவில்லை; அல்லது மூடி மறைக்கப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளருக்கு அமெரிக்க அரசு கொடுத்த அறிக்கையில் பல்வேறு கொத்துக் குண்டுகள் நோ ஃபயர் ஜோன் உட்பட பல்வேறு இடங்களில் வீசப்பட்டதாக நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் எடுத்துரைக்கப்பட்டன.

2012 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதங்கள் நிபுணர் ஒருவரின் மின்னஞ்சல் வெளியில் கசிந்தது. அதில் ஐக்கிய நாடுகள் சபை 2009 ஆம் ஆண்டு புதுக்குடியிருப்பு பகுதிக்கு அருகில் மருத்துவமனையின் மீது கொத்துக் குண்டுகள் வீசப்பட்டது ஐக்கிய நாடுகள் சபை அடையாளம் கண்டு இருப்பது தெரிந்தது.

மேலும், தற்போது வழங்கப்பட்டுள்ள சாட்சியங்களின் படி இலங்கை இராணுவமே தாக்குதல்களுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதை மீண்டும் இதன் மூலம் பரிந்துரை செய்வதாக ஹேலோவை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கண்ணிவெடி ஆலோசனைக் குழுவைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் ஸ்விஸ் ஃபவுண்டேஷன் ஃபார் மைன் ஆக்ஷன் என்ற அமைப்பை சேர்ந்தவர்களும் கொத்துக் குண்டுகள் இறுதி யுத்தத்தில் குறிப்பாக நோ ஃபயர் ஜோனிலும் கூட வீசப்பட்டன என்பதை உறுதிபட ஒப்புக்கொள்கின்றனர்.

பொதுவாக கண்ணிவெடி அகற்றும் குழு தங்களுடைய கண்டுபிடிப்பை வெளியே சொல்வது இல்லை. இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் இயங்கும் இலங்கை தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையத்திடம் தான் தெரிவிக்கவேண்டும்.

இரண்டு முன்னால் கண்ணிவெடி அகற்றும் குழுவைச் சேர்ந்தவர்களும் கொத்துக் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதை ஒப்புக்கொள்கின்றனர்.

கண்ணிவெடி ஆலோசனைக் குழுவைச் சேர்ந்த முன்னால் உறுப்பினர் ஒருவர் அதிக அளவில் மக்கள் வசித்த, செறிவு மிகுந்த பகுதிகளில் எல்லாம் கொத்துக் குண்டுகளை அவர்கள் கண்டுபிடித்ததாக கூறுகிறார். மேலும், நோ ஃபயர் ஜோனிலும் ஒரு கொத்துக் குண்டு புதுகுடியிருப்புக்கு அருகில், ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்ட குழு 2012 ஆம் ஆண்டு கொத்துக் குண்டுகளை கண்டுபிடித்த அதே பகுதியில் கண்டுபிடித்ததாக கூறுகிறார்.

கொத்துக் குண்டின் எல்லா பகுதிகளும் அதே இடத்தில் கிடைத்ததாகவும் அவர் கூறுகிறார். மேலும், கண்ணிவெடி ஆலோசனைக் குழு இதனை பொதுவாக பாதுகாப்பு கருதி வெளியே கூறுவதில்லை என்று கூறுகிறார்.

இன்னொரு முன்னாள் சுவிஸ் ஃபவுண்டேஷன் ஃபார் மைன் ஆக்ஷன் நிறுவனத்தில் இருந்த கண்ணிவெடி அகற்றும் குழுவின் அதிகாரி அவர்கள் நிறைய கொத்துக் குண்டுகளை கண்டறிந்ததாகவும் அதனை வெளியே கூறாமல் மறைத்து விட்டதாகவும் கூறுகிறார்.

மேலும், அவர் 2010 ஆம் ஆண்டு இந்த ஆயுதங்கள் முதல் நோ ஃபயர் ஜோன் பகுதியில், அதாவது சுதந்திரபுரம் கிராமம் மற்றும் புதுக்குடியிருப்புக்கு அருகில் கண்டறிந்ததாகவும், அதனை வெளியே கூறினால் வரும் ஆபத்தை எண்ணி வெளியில் கூறவில்லை என்றும் கூறுகிறார்.

இந்த படங்களை வெளியிட்ட ஹேலோ நிறுவனம் கண்ணிவெடி அகற்றும் குழு இந்த கொத்துக் குண்டுகளை பற்றி ராஜபக்ஷே ஆட்சின் போது வெளியே கூறினால் அதன் விளைவுகளை எண்ணி மிகவும் பயந்து இருந்ததாக கூறுகின்றனர்.

மேலும், அந்த நிறுவனத்தை சேர்ந்த செய்தி தொடர்பாளர் கூறிய போது “நாங்கள் எங்களது அறிக்கை அளிக்கும் பொறுப்பினை மிகவும் தீவிரமாக செய்து வருகிறோம். இலங்கை மட்டும் அல்லாமல் எந்த நாடுகளில் நாங்கள் கண்டுபிடிக்கும் செய்திகளும் எங்களது மாத அறிக்கையில் தேசிய அதிகாரிகளிடம் சமர்பிக்கப்படும்; எப்போதுமே நடுநிலையான ஒரு அமைப்பாக எங்களது வேலை போர் குண்டுகளில் இருந்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகும்”

சர்வதேச அளவில் செயல்படும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த நபர் அவர் கொத்துக் குண்டுகள் சில நொடிகளுக்கு உள்ளாகவே தாக்குதல்கள் முல்லைவேட்டு நோ ஃபயர் ஜோன் பகுதியில் பார்த்ததாகவும், வெடிக்காத சைக்கிளின் ‘டைனமோ’ போன்ற ஒரு சிறிய ரிப்பன் ஒரு பக்கத்தில் கட்டப்பட்ட ஒன்றை தான் பார்த்ததாகவும் நிறைய சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கொத்துக் குண்டுகளின் மாதிரி படங்களை தங்களது நோட்டிஸ் போர்டில் ஒட்டி அதன் ஆபத்தை கூறுவார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

மேலும், புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் நடந்த கொத்துக் குண்டு வெடிப்பு நிகழ்வினை நேரில் பார்த்ததாக கூறும் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஒருவர், கொத்துக் குண்டுகள் மிக உயரமாக வெடிக்கும் என்றும் சிறிய வெடிப்புகள் மரங்களையும் மக்களையும் தாக்கும் என்றும் கூறுகிறார்.

அதுமட்டுமல்லாமல், கொத்துக் குண்டுகள் விழும்போது ஒன்றை நாம் மீண்டும் மீண்டும் அடிப்பது போல் தொடர்ந்து சத்தங்கள் கேட்டுக் கொண்டே இருக்கும் என்றும் அதில் இருந்து வரும் நாற்றம் வயிற்றை பிடுங்கும் என்றும் ஒருவிதமான எரியும் துர்நாற்றம் அதில் இருந்து வரும் என்றும் அவர் கொத்துக் குண்டை பற்றி விவரிக்கிறார்.

இவர் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் போர்க் குற்ற விசாரணை பற்றி சாட்சியம் அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அரசின் மீதான போர் குற்ற விசாரணைக்கு சாட்சி கூறிய மற்றொரு நபர் “மீண்டும் மீண்டும் நோ ஃபயர் ஜோன் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தபட்டது. அது தான் போரின் நோக்கம்; மக்களை கொல்லுதல்” என்கிறார்.

ஆசிய மற்றும் ஓசியானியாவின் பிராந்திய சட்ட நிபுணத்துவ சர்வதேச ஆணையத்தின் இயக்குனர் சாம் சரிபி கூறியதாவது “இந்த சமீபத்திய குற்றச்சாட்டுகள் நம்பத்தகுந்த, பயனுள்ள, பொறுப்பு மிகுந்த பொறிமுறையின் தேவையை நமக்கு தூக்கி காட்டுகிறது” என்கிறார்.

இனப்படுகொலைக்கு எதிரான கூட்டமைப்பின் தலைவர் ஜன் ஜனநாயகம் “இனப்படுகொலை நடைபெற்று ஏழு ஆண்டு ஆகியும் சிங்கள அரசாங்கம் மக்கள் மீது உபயோகப்படுத்தப்பட்ட ஆயுதங்களை பற்றி மறுத்து வருகிறது. கொத்துக் குண்டுகளை உபயோகித்ததை சிங்கள அரசு தொடர்ந்து மறுத்து வருவதும், தடவியல் நிபுணர்களின் ஏழு ஆண்டுகளாக அவர்கள் சேகரித்து வைத்து இருக்கும் ஆதாரங்களும், சர்வதேச விசாரணை ஏன் வேண்டும் மற்றும் சர்வதேச தடவியல் நிபுணர்கள் அதில் சேர்க்கப்பட வேண்டும் என்பதை தெளிவாக கூறுகிறது”

இதைப் பற்றி இலங்கை அரசாங்கத்திம் கேள்வி எழுப்பப்பட்ட போது பதில் அளிக்கவில்லை.

 

நன்றி தி கார்டியன்

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top