அமெரிக்க உதவி இல்லாமல் புலிகளை வீழ்த்தி இருக்க முடியாது சமரவீரா

இலங்கை அமைச்சர் மங்கள சமரவீரா தமிழினப்படுகொலையில்  அமெரிக்க அரசு முக்கிய  பங்காற்றிருப்பதை உறுதி படுத்தியிருகிறார். அவர் புலிகளை வீழ்த்துவது என்பது  வாசிங்டன்  நண்பர்களின் உதவி இல்லாமல் சாத்தியமில்லை  என்று கூறியுள்ளார்.

mangala_samaraweera_condoleesa_rise_2006

புலிகள் மிதான  ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை புலிகளுக்கு முக்கியமான  மிக பெரிய பின்னடைவாக இருந்தது என்று முன்னால் அதிபர் ராஜபக்சேவிற்கு எழுதிய திறந்த  கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மங்கள சமரவீரா ராஜபக்சேவின் அரசில் 2005 , 2007 இல்  வெளியுறவு  அமைச்சகத்தில் இருந்தவர் பின் 2015 சிறிசேனாவின் அரசிலும் வெளியுறவு அமைச்சராக  இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமர வீரா இதற்கு  நான் எனது முன்னோடியான லக்ஸ்மன் கதிர்காமருக்கு நன்றி சொல்ல வேண்டும்.  1998 இல் அமெரிக்காவிலும்  2001 இல் பிரிட்டனும் தடை செய்து அவரது காலத்திலேயே   வாசிங்டன் நண்பர்களாலேயே  ஒரே நேரத்தில்  ஐரோப்பிய ஒன்றியத்தின்  27 நாடுகளின் தடையும் அதன்  தொடர்சியாக  கனடாவின் தடையும் நிகழ்ந்து புலிகளுக்கு மிக பெரிய அடி விழுந்தது. அமெரிக்கா,இங்கிலாந்து,ஐரோப்பிய,ஒன்றியம் மற்றும் கனடாவின் தடை அவர்களின்  நிதி மூலம்  மற்றும் கொள்முதல்  நிலையங்கள் என அனைத்தும் முடக்கப்பட்டு பெரும் பின்னடைவிற்கு உள்ளாக்கியது என்றும் தனது கடிதத்தில் சமரவீரா தெரிவித்துள்ளார்.

முன்னால் பிரதமர் ராஜபக்சேவின் அரசு அமெரிக்காவினை புலி ஆதரவாளர்  என்று குற்றம் சாட்டுகிறது ஆனால்  அமெரிக்க அரசின் ஆதரவு இல்லாமல் போயிருந்தால் குறிப்பாக காண்டோலிசா ரைஸ் மற்றும் நிகோலஸ் பர்ன்ஸ்  பங்கு இல்லாமல் 27 நாடுகளின் ஒருமித்த கருத்து உருவாகியிருக்காது. என்கிறார் சமரவீரா

 

இதில்  காண்டலிசா  ரைஸ்  அமெரிக்காவின் அரச செயலாளராகவும் பின்னர் தேச  பாதுகாப்பு ஆலோசகராகவும் பதவி வகித்தவர்   என்பது குறுப்பிடத்தக்கது. மேலும் நிகோலஸ் பர்ன்ஸ்   ஜார்ஜ் w புஷின்  அரசில் முதல் முன்று அலுவலரில் ஒருவராக இருந்தவர்

ரணிலின் பெரும் திட்டம்

இந்த காலகட்டத்தில்தான்  சந்திரிகா அரசின் கீழ்  பிரதமராக  இருந்த  ரணில் விக்ரமசிங்கே புலிகளுக்கு எதிராக  மிக முக்கியமான இரண்டு வேலைகளை செய்தார் .

அதில் மிக  முக்கியமானது 2002 புலிகளுடனான அமைதி ஒப்பந்த பேச்சுவாவார்த்தைகள். நடந்த காலகட்டத்தில் அமெரிக்காவுடனான Access and Cross Services defence agreement (ACSA) ஒப்பந்ததில்  கையெழுத்திட்டது  இந்த ஒப்பந்தத்தின் மூலம் ராணுவதளவாடங்கள் மற்றும் சிறப்பு  ஆயுதங்கள் கடற்படயினருக்கான பயிற்சி மற்றும் தகவல்கள் ஆகியன அமெரிக்கா  மூலம் பெரும் வாய்ப்பை பெற்றது என்றும் சமரவீரா தெரிவித்துள்ளார்.

மேலும் ரணிலின் காலத்தில் தான் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகண தளபதி கருணா  என்று அறியப்படுகிற விநாயக  மூர்த்தி கருணாகரன் உடைக்கப்பட்டு விடுதலை  புலிகளின் ராணுவ ரகசியங்கள் மேலும் போர் முறைகள் பற்றிய புரிதலை கருணாவின் மூலம் பெற்றது. புலிகளுக்கு  எதிரான போர் வெற்றிக்கு முக்கிய காரணம் என சமரவிரா தெரிவித்துள்ளார்.

மேலும் 2013 இல்  நடந்த மக்கள் தீர்ப்பாயத்தில் தமிழ் இனப்படுகொலையில் அமெரிக்கா இங்கிலாந்து பங்கெடுத்தது  என்று  குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  குற்றம் சாட்டப்படுள்ளது என்றால்  ஆயுத உதவிகள் மற்றும் தளவாடங்கள்  மேலும் சில வழிகளில் அவர்கள் பங்கெடுத்துள்ளனர்  என தெரிவித்துள்ளது.

மேலும் சமர வீரா இங்கிலாந்தில் இருந்து  ஒளிபரப்பாகும் சேனல் 4 தொலைக்காட்சியில்  போர் குறித்து ஒளிபரப்பபட்ட காணொளி காட்சிகள் இலங்கை ரானுவதினாரல் மேலிடத்து உத்தரவின் பெயரில் கொடுக்க பட்டவை என்றும் அவர் கூறியுள்ளார்.

இது வரை இலங்கை அதிகாரிகள் போர் குற்றங்களுக்கு  எந்தவிதமான ஆதாரமும் இல்லாத  நிலையில் வைத்து இருந்தனர்

முதலில் ஒளிபரப்ப பட்ட காணொளி காட்சியில் இலங்கை ராணுவ  வீரர்கள்  மரண தண்டனை  நிறைவேற்றும் காட்சிகள் ஒளிபரப்பபட்டது. இவை  மேலும் சேனல் 4  தொலைகாட்சி இலங்கை ராணுவம் பொது மக்கள் மீது குண்டுகள் வீசியதையும் மற்றும் மக்கள் இடம்பெயர்ந்து வந்த நொ பயர் சோன் ( no fire zoneNFS) என்ற பகுதியையும் குறிவைத்து தாக்கியதாகவும் அறிக்கை வெளியிடுள்ளது..

ராணுவ நீதிமன்றம்

2013 ஆம்  ஆண்டு ராணுவ நிதிமன்றம் பாதுகாக்க பட்டபகுதியில் (NFS)

குண்டு வீசியதாக  சொல்லபட்ட குற்றசாட்டுகளை தள்ளுபடி  செய்தது.

இந்த விசாரனை நிதிமன்றம் முன்னால் ராணுவ அதிகாரி சிரிசாந்தெ டி சில்வா தலைமையில்; நடைப்  பெற்றது இதில் சில விசாரணை அற்ற கொலைகள் குறித்த விசாரனை அறிக்கை வெளியிடபடவில்லை.

2010 ஆம்  ஆண்டு ஐ நா குழு அந்த காணொளிகளை பரிசோத்தது அவை உண்மை என சொல்லி போர் குற்ற விசாரணைக்கு அழைப்பு கொடுத்தது.

சமரவிராவின்  இந்த  கடித ஒப்புதல் என்பது இனப்படுகொலையில் அமேரிக்கா  தொடர்சியாக  பங்கெடுத்ததற்கான ஆதாரங்களாக இன்று வெளிப்பட்டுள்ளது.

 

நன்றி : jds


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top