ராபர்ட் வதேரா மீதான பிடி இறுகுகிறது: அமலாக்கத் துறை நோட்டீஸ்

M_Id_483518_Robert_Vadra

ராஜஸ்தான் மாநிலம் பைகானூர் மாவட்டத்தில் ராபர்ட் வதேராவின் நிறுவனம் நில மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பைகானூர் மாவட்டம் கோல்யாட் பகுதியில் ஆயிரக் கணக்கான ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களை, மிகக் குறைந்த விலைக்கு வாங்கியதாக ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக அமலாக்கத் துறை நில மோசடி வழக்குப் பதிவு செய்து, வதேராவின் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நில மோசடி புகார் குறித்து வரும் 24ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top