ஐஎஸ்எல்:கேரள அணியின் பயிற்சியாளராக கோபெல் நியமனம்

1466414495_steve-coppell

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் விளையாடி வரும் கேரள பிளாஸ்டர்ஸ் அணியின் பயிற்சியாளராக ஸ்டீவ் கோபெல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கோபெல், மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 322 ஆட்டங்களில் விளையாடி 53 கோல்களை அடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக 42 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். 60 வயதான கோபெல், பிரிஸ்டல் சிட்டி, பிரிக்டன் & கோவ் அல்பியான், மான்செஸ்டர் சிட்டி, பிரென்ட்ஃபோர்டு உள்ளிட்ட அணிகளுக்கு சுமார் 1,000 ஆட்டங்களில் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top