ஈழத்தமிழர் பிரச்னை:தனி விவாதத்துக்குத் தயார்

04-durai-murugan-300

ஈழத்தமிழர் பிரச்னை குறித்து தனி விவாதத்துக்குத் தயார் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் சவால் விடுத்தார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் வெற்றிவேல் செவ்வாய்க்கிழமை பேசினார். அப்போது, இலங்கைத் தமிழர் பிரச்னையில், கொத்துக் கொத்தாக தமிழர்கள் மடிய யார் காரணம் என்று அதிமுக உறுப்பினர் வெற்றிவேல் கேள்வி எழுப்பினார்.

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த திமுக கொறடா சக்ரபாணி, ஒரு கருத்தைத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம், முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் சாக யார் காரணம் என்று கேள்வி எழுப்பி விட்டு, அடுத்த பொருளுக்கு அவர் (வெற்றிவேல்) சென்று விட்டார் என விளக்கமளித்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது, எழுந்துபேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், ஈழத்தமிழர் பிரச்னை பற்றி தனியான விவாதத்துக்கு தயார். எனவே, உறுப்பினர் ஆளுநர் உரை மீது மட்டுமே பேச வேண்டும் என்றார். இதைத் தொடர்ந்து, அவையில் வேறொரு பிரச்னை எழுப்பப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top